Homeசெய்திகள்சினிமாமலையாள சினிமாவில் என்ட்ரி கொடுக்கும் யோகி பாபு!

மலையாள சினிமாவில் என்ட்ரி கொடுக்கும் யோகி பாபு!

-

மலையாள சினிமாவில் என்ட்ரி கொடுக்கும் யோகி பாபு!நகைச்சுவை நடிகரான யோகி பாபு தற்போது பல படங்களை கைவசம் வைத்திருக்கிறார். தமிழில் மட்டுமல்லாமல் ஹிந்தியிலும் கூட நடித்துள்ளார்.
அந்த வகையில் சமீபத்தில் ஷாருக்கானுடன் இணைந்து ஜவான் திரைப்படத்திலும் ரஜினியுடன் இணைந்து ஜெயிலர் திரைப்படத்திலும் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அது மட்டும் இல்லாமல் மண்டேலா படத்தின் மாபெரும் வெற்றிக்கு பிறகு கதாநாயகனாகவும் நடித்து வருகிறார் யோகி பாபு. இவர் கதாநாயகனாக நடிக்கும் படங்கள் பெரும்பாலானவை ரசிக்கும் வகையில் இருக்கும். அந்த அளவிற்கு சிறந்த கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார் யோகி பாபு.

யோகி பாபு நடிப்பில் லக்கி மேன், குய்கோ போன்ற படங்கள் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. மேலும் சிம்பு தேவன் இயக்கத்தில் போட் எனும் திரைப்படத்திலும் யோகி பாபு நடிக்கிறார். சமீபத்தில் இதன் டீசர் வெளியாகி கவனம் பெற்றது. அதேசமயம் நயன்தாராவுடன் இணைந்து மண்ணாங்கட்டி திரைப்படத்திலும் நடித்துக் கொண்டிருக்கிறார்.மலையாள சினிமாவில் என்ட்ரி கொடுக்கும் யோகி பாபு!மேலும் தெலுங்கில் பிரபாஸ் உடன் இணைந்து புதிய படம் ஒன்றில் நடிக்க இருக்கிறார். இந்நிலையில் யோகி பாபு குறித்த புதிய தகவல் ஒன்று கிடைத்துள்ளது. அதாவது தமிழ், தெலுங்கு ,ஹிந்தி என அனைத்து மொழிகளிலும் கலக்கி வரும் யோகி பாபு தற்போது மலையாள சினிமாவிலும் நடிக்க இருக்கிறாராம். மேலும் இந்த படம் தொடர்பான மற்ற தகவல்கள் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

MUST READ