Homeசெய்திகள்சினிமாயோகி பாபுவின் 'போட்' பட முதல் பாடல் வெளியீடு!

யோகி பாபுவின் ‘போட்’ பட முதல் பாடல் வெளியீடு!

-

யோகி பாபுவின் போட் பட முதல் பாடல் வெளியாகி உள்ளது.யோகி பாபுவின் 'போட்' பட முதல் பாடல் வெளியீடு!நகைச்சுவை நடிகராக தனது திரைப்பயணத்தை தொடங்கிய யோகி பாபு மண்டேலா திரைப்படத்திற்கு பிறகு பல படங்களில் ஹீரோவாக நடித்து வருகிறார். மேலும் தமிழ், தெலுங்கு, இந்தி என அனைத்து மொழிப்படங்களிலும் நடித்து பிசியான நடிகராகவும் வலம் வருகிறார். இவர் தற்போது கைவசம் ஏகப்பட்ட படங்களை வைத்திருக்கும் நிலையில் வடிவேலு நடிப்பில் வெளியான இம்சை அரசன் 23ஆம் புலிகேசி படத்தின் இயக்குனர் சிம்பு தேவன் இயக்கத்திலும் புதிய படம் ஒன்றில் நடித்துள்ளார். அந்த வகையில் இந்த படத்திற்கு போட் என்ற தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் யோகி பாபு தவிர கௌரி கிஷன், சின்னி ஜெயந்த், எம்.எஸ். பாஸ்கர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

காமெடி கலந்த சர்வைவல் திரில்லர் படமாக தயாராகி இருக்கும் இந்த படத்தை மாலி அண்ட் மான்வி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்திருக்கிறது. ஜிப்ரான் இந்த படத்திற்கு இசை அமைத்துள்ளார். மாதேஷ் மாணிக்கம் ஒளிப்பதிவு பணிகளை கவனித்திருக்கிறார். இந்த படம் வருகின்ற ஆகஸ்ட் 2ஆம் தேதி வெளியாக இருக்கிறது. இந்நிலையில் இந்த படத்தின் சொக்க நானும் நிக்கிறேன் எனும் பாடல் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இந்த பாடலை சுதா ரகுநாதன் பாடியுள்ள நிலையில் கோல்ட் தேவராஜ் பாடல் வரிகளை எழுதி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

MUST READ