Homeசெய்திகள்சினிமாயோகி பாபு நடிக்கும் புதிய படம்..... அட்டகாசமான டைட்டில் வெளியீடு!

யோகி பாபு நடிக்கும் புதிய படம்….. அட்டகாசமான டைட்டில் வெளியீடு!

-

- Advertisement -

யோகி பாபு நடிக்கும் புதிய படத்தின் டைட்டில் வெளியாகியுள்ளது.யோகி பாபு நடிக்கும் புதிய படம்..... அட்டகாசமான டைட்டில் வெளியீடு!நடிகர் யோகி பாபு ஆரம்பத்தில் நகைச்சுவை நடிகராக தனது திரைப்பயணத்தை தொடங்கியவர். அதை தொடர்ந்து மண்டேலா எனும் திரைப்படத்தில் கதாநாயகனாகவும் களமிறங்கினார். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் ஏகோபித்த வரவேற்பை பெற்று யோகி பாபுவிற்கு பல்வேறு தரப்பினரிடையே பாராட்டுகளையும் பெற்று தந்தது. அதை தொடர்ந்து பல படங்களில் ஹீரோவாக நடித்து வருகிறார் யோகி பாபு. அந்த வகையில் போட், பூமர் அங்கிள், வானவன் போன்ற படங்களை கைவசம் வைத்திருக்கிறார். அதே சமயம் பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து தமிழ் மொழி மட்டுமல்லாமல் மலையாளம், இந்தி மொழி படங்களிலும் பணியாற்றி வருகிறார். கடைசியாக யோகி பாபு மலையாளத்தில் வெளியான குருவாயூர் அம்பல நடையில் திரைப்படத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அடுத்ததாக யோகி பாபு புதிய படம் ஒன்றில் நடிக்க இருக்கிறார். இந்த படத்திற்கு ஜோரா கைய தட்டுங்க என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாக படக்குழுவினர் போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். இந்த போஸ்டரை பார்க்கும்போது இந்த படம் மேஜிக் சம்பந்தமான கதைக்களம் போல் தெரிகிறது.
யோகி பாபு நடிக்கும் புதிய படம்..... அட்டகாசமான டைட்டில் வெளியீடு!இந்த படத்தை வினீஷ் மில்லனியம் இயக்குகிறார். வாமா என்டர்டெயின்மென்ட் மற்றும் ஸ்ரீ சரவணா ஃபிலிம் ஆர்ட்ஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து இந்த படத்தை தயாரிக்கிறது. மது அம்பத் இந்த படத்திற்கு ஒளிப்பதிவு பணிகளை கவனிக்க அருணகிரி இதற்கு இசையமைக்கிறார். இந்த போஸ்டர் இணையத்தில் ட்ரெண்டாகி வருகிறது. மேலும் படம் தொடர்பான அப்டேட்டுகள் அடுத்தடுத்து வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

MUST READ