Homeசெய்திகள்சினிமாவிதார்த்துடன் நடிக்கும் யோகி பாபு.... குய்கோ ட்ரைலர் வெளியீடு!

விதார்த்துடன் நடிக்கும் யோகி பாபு…. குய்கோ ட்ரைலர் வெளியீடு!

-

குய்கோ படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது.

நகைச்சுவை நடிகரான யோகி பாபு தற்போது பல படங்களில் நடித்து வருகிறார். கதாநாயகனுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களிலும் கவனம் செலுத்தி வருகிறார். சமீபத்தில் லக்கிமேன் திரைப்படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.

யோகி பாபு பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்து வருகிறார். தற்போது மைனா, குரங்கு பொம்மை உள்ளிட்ட படங்களின் மூலம் பிரபலமான நடிகர் விதாரத்துடன் இணைந்து குய்கோ எனும் திரைப்படத்தில் நடித்துள்ளார். அருள் செழியன் இந்த படத்தை இயக்கியுள்ளார். ஏ எஸ் டி பிலிம்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரித்துள்ளது. ஆண்டனி தாசன், கெவின் மிரண்டா ஆகியோர் இதற்கு இசையமைத்துள்ளனர். சமீபத்தில் இந்த படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் இந்த படத்தின் டிரைலரை பட குழுவினர் வெளியிட்டுள்ளனர்.விதார்த்துடன் நடிக்கும் யோகி பாபு.... குய்கோ ட்ரைலர் வெளியீடு! விடிந்தால் ஐபிஎல் கிரிக்கெட் மேட்ச் பார்ப்பதற்காக துடியாய் துடிக்கும் இளைஞனாக விதார்த். ஆனால் அதற்கு முன்பாக ஒரு முக்கிய வேலை வருகிறது. இறந்து போன மூதாட்டியின் உடலை அவர்களுடைய உறவினர்களிடம் சேர்க்க வேண்டும். இதற்காக விதார்த் கிளம்புவது போல் காட்டப்பட்டுள்ளது. இறந்து போன மூதாட்டியின் மகனாக யோகி பாபுவை அறிமுகம் செய்கிறார்கள். உள்ளூரில் மாடு மேய்த்துக் கொண்டிருக்கும் யோகி பாபு சவுதி அரேபியாவில் ஒட்டகம் மேய்க்கும் தொழிலாளியாக இருந்து வருகிறார்.  காதல்,  காமெடி என அவரைச் சுற்றி கலகலப்பாக செல்லும் ட்ரைலரில் யோகி பாபுவுக்கு இறந்த தன் தாயின் மீதான அன்பை செண்டிமெண்டாகவும் காட்டியது போல் தெரிகிறது. “கடைசி காலத்தில் உன்னை கூட வச்சு பாத்திருக்கனும்… தப்பு பண்ணிட்டேன்” என்று யோகி பாபு செண்டிமெண்டாக பேசி கண் கலங்க வைக்கிறார்.விதார்த்துடன் நடிக்கும் யோகி பாபு.... குய்கோ ட்ரைலர் வெளியீடு!அதன் பின் என்ன நடந்தது என்பதை படத்தின் மீதி கதையாக இருக்கும் என டிரைலரிலேயே காண்பித்து விட்டார்கள். விதார்த் நடிக்கும் படங்கள் அனைத்துமே விமர்சன ரீதியாக நல்ல படங்களாகவே அமைந்து வருகின்றன. அந்த வகையில் விதார்த், யோகி பாபு கூட்டணியில் உருவாகியுள்ள இந்த படமும் காமெடி எமோஷனல் கலந்த ஒரு நல்ல பொழுதுபோக்கு படமாக இருக்கும் போல தெரிகிறது. வெளிநாடு வாழ் புலம்பெயர் தொழிலாளர்களின் வலியையும் எமோஷனலாக டிரெய்லரிலேயே காண்பித்து விட்டார்கள். வரும் நவம்பர் 24 அன்று இப்படம் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

MUST READ