Homeசெய்திகள்சினிமா'மஞ்சள் வீரன்' படத்திலிருந்து நீக்கப்பட்ட யூட்யூபர் டிடிஎஃப் வாசன்!

‘மஞ்சள் வீரன்’ படத்திலிருந்து நீக்கப்பட்ட யூட்யூபர் டிடிஎஃப் வாசன்!

-

பிரபல யூட்யூபர் டிடிஎஃப் வாசன் கோவையை பூர்விகமாகக் கொண்டவர். இவர் விலையுயர்ந்த பைக்குகளில் சுற்றுலா சென்று தன்னுடைய பயணங்களை வீடியோவாக யூட்யூபில் பதிவிடுவார். 'மஞ்சள் வீரன்' படத்திலிருந்து நீக்கப்பட்ட யூட்யூபர் டிடிஎஃப் வாசன்!அந்த வகையில் பல ரசிகர்களை சேகரித்து வைத்துள்ளார் டிடிஎஃப் வாசன். இது ஒரு பக்கம் இருக்க, மற்றொரு பக்கம் இவர் பல்வேறு வழக்குகளில் காவல்துறைக்கு சென்று வந்தவர். பலமுறை பைக்கில் இருந்து கீழே விழுந்து விபத்துகளிலும் சிக்கி இருக்கிறார். இதற்கிடையில் தான் இவர், மஞ்சள் வீரன் எனும் திரைப்படத்தில் ஹீரோவாக நடிக்கப் போகிறார் என்று அறிவிப்பு வெளியானது. அதன்படி ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரையும் படக்குழுவினர் வெளியிட்டிருந்தனர். இந்த அறிவிப்பு கடந்த ஆண்டு ஜூன் மாதம் வெளியிடப்பட்டது. இந்த படத்தினை செல்அம் என்பவர் எழுதி இயக்குகிறார். தி பட்ஜெட் ஃபிலிம் கம்பெனி நிறுவனம் இந்த படத்தை தயாரிக்கிறது.'மஞ்சள் வீரன்' படத்திலிருந்து நீக்கப்பட்ட யூட்யூபர் டிடிஎஃப் வாசன்! இந்த படத்தின் படப்பிடிப்புகள் ஏற்கனவே தொடங்கப்பட்டு நடைபெற்று வந்த நிலையில் தற்போது இந்த படத்தில் இருந்து டிடிஎஃப் வாசன் நீக்கப்பட்டுள்ளதாக படத்தின் இயக்குனர் செல்அம் சமீபத்தில் நடந்த பேட்டி ஒன்றில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். எனவே இந்த படம் கைவிடப்பட்டதாக சொல்லப்படுகிறது. மேலும் டிடிஎஃப் வாசன் மற்றுமொரு புதிய படத்தில் நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

MUST READ