சென்னை சேத்துப்பட்டில் உள்ள லேடி ஆண்டாள் பள்ளியில் இயக்குனர் விஷ்ணுவர்தன் இயக்கத்தில் அறிமுக நடிகர் ஆகாஷ் முரளி, அதிதீ சங்கர் உள்ளிட்டோ நடிப்பில் ஜனவரி 14-ஆம் தேதி வெளியாகயுள்ள நேசிப்பாயா படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது. இதில் நடிகர்கள் சரத்குமார்,சிவகார்த்திகேயன்,அதர்வா நடிகர் அதிதீ மற்றும் பல்வேறு நடிகர் நடிகைகள் கலந்து கொண்டணர்.
இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா பேசுகையில் நாங்கள் அனைவரும் இந்த படத்திற்காக முடிந்த அளவிற்கு முழு உழைப்பை கொடுத்து உள்ளோம். இது எனக்கு மிகவும் நெருக்கமான படம். நானும் விஷ்ணுவும் ஒருவருக்கு ஒருவர் புரிந்து கொள்வோம். அப்பாவின் பாடல்களை இந்த சந்தர்ப்பத்தில் இதை கேட்கலாம். ஹீரோ இன்ட்ரோவில் – பொதுவாக என் மனசு தங்கம், ஹீரோயின் ஹீரோ சந்திப்பில் – தென்றல் வந்து தீண்டும், ஹீரோ ஹீரோயின் காதல் – கொடியிலே மல்லிகை பூ, ஹீரோ ஹீரோயின் பிரிவு, சுந்தரி கண்ணால் ஒரு செய்தி. சூழ்நிலைக்கு ஏற்ப தன் தந்தையின்(இளையராஜா)எந்தெந்த பாடல்களை பயன்படுத்தலாம் என்று மேடையில் பாடிய யுவன் சங்கர் ராஜா .
விழா மேடையில் பேசிய தயாரிப்பாளர் கலைப்புலி தானு அவர்கள் ஆகாஷ் முரளி என்ற புதிய நடிகரை அறிமுகம் செய்து உள்ளனர். யுவன் சங்கர் ராஜாவின் ஒவ்வொரு பாடலும் தேனாக பாய்கிறது என்றாா். இந்த நேசிப்பாயா உண்மை பண்பை நேசிக்கும். படத்தின் தயாரிப்பாளர் தியாகராஜன் பேசும் போது. அதர்வாவை நான் தான் அறிமுகம்படுத்தினேன். விஷ்ணு வரதன் படங்களை ரொம்ப ஸ்டைல் ஆக எடுப்பார் அதனால் கண்டிப்பாக படம் நன்றாக இருக்கும் என்றாா். நடிகர் சரத்குமார் மேடையில் பேசுகையில் ரொம்ப கண்டிப்பான தயாரிப்பாளர் ஸ்னேஹா அதனால் நேரத்திற்கு வந்துவிட்டேன். நேசிபாயாக்கும் எனக்கும் என்ன சம்மந்தம் என்று கேட்டால் நான் நேசித்து இங்கே வந்து விட்டேன். இந்த படத்தில் கதாநாயகியை கடத்தி விட்டு பல நாடுகள் சுற்றினேன்.
நடிகர் அதர்வா பேசுகையில் நேசிப்பாயா பொருத்தவரை எங்களுக்கு மிகவும் நெருக்கமான படம். விஷ்ணு வரதன் படத்தில் என் தம்பி அறிமுகம் ஆவதில் ரொம்ப மகிழ்ச்சி. என் முதல் படத்திலும் u1 தான் இசை. அதீதி மிகவும் அழகாக இருக்கிறார் கூறிய அதர்வா தனது அம்மாவை மேடைக்கு அழைத்து தம்பியை பாராட்ட சொன்னாா்.
நடிகை அதிதீ பேசுகையில் இந்த படம் எப்போது வெளியாகும் என வெகு நாட்களாக காத்திருந்தேன். விஷ்ணு அவர்களுக்காக தான் இந்த படத்திற்கு ஒப்புக்கொண்டேன். விருமன், மாவீரன் படங்களில் ஸ்கிரிப்ட் என்னிடம் இருந்தது. இந்த படத்தில் என் மீது முழு நம்பிக்கை வைத்து நேரடியாக படப்பிடிப்பிற்கு அனுப்பிவிட்டார். என்னுடைய முதல் படத்தில் சிவா கிட்ட தான் விருது வாங்கினேன் இரண்டாவது படத்தில் என்னுடன் நடித்தார். மூன்றாவது படத்தில் நேசிப்பாயா படத்திற்கு வருவார் என்று எனக்கு தெரியாது. எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.பொங்கலுக்கு என் அப்பாவின் படமும் வருகிறது என்னுடைய படமும் வருகிறது என்றார்.
நடிகர் விஜய் ஆண்டனி பேசும் போது என்னுடைய கிளாஸ் மேட் தான் விஷ்ணு. விஷ்ணுவின் படத்தில் நடிக்கிறார் ஆகாஷ் என்பதில் மகிழ்ச்சியே, யுவன் பாடல்கள் அனைத்தும் நன்றாக உள்ளது. காதல் கொண்டேன் படத்தில் அனைத்து பாடலும் பிடிக்கும். ஆகாஷ் மிகவும் அழகாக இருக்கிறார். சூர்யா கார்த்திக் மாதிரி சினிமாவை வளம் வர வாழ்த்துகளை தெரிவித்தாா்.
நேசிப்பாயா படத்தின் இயக்குனர் விஷ்ணு வர்தன் சிவாவின் வளர்ச்சி பார்த்து மகிழ்கிறேன். ஸ்னேஹா பிரிட்டோ ஒரு கண்டிப்பான ஆன தயாரிப்பாளர். முதல் நாள் படப்பிடிப்பு முதல் இறுதி நாள் படப்பிடிப்பு வரை ஆகாஷின் வளர்ச்சியை கண்டு சந்தோசமாக உள்ளது. ஆகாஷ் உடன் படம் பண்ணயதில் மகிழ்ச்சி. நயன் விக்கி மூலமாக கல்கி நம்பர் கிடைத்தது. விஜய் ஆன்டனி நிகழ்ச்சிக்கு வந்ததில் மகிழ்ச்சி. இடைவேளையில் அதீத்தியின் நடிப்பை பார்த்து கண் கலங்கி விட்டேன். தினேஷ் மாஸ்டர் எனக்கு எப்போதும் ஃபேவரிட். யுவன் எப்போதும் எனக்கு உறுதுணையாக இருப்பார். அறிந்தும் அறியாமலும் படத்தில் யுவனின் இல்லை என்றால் யாரும் பார்க்க வந்திருக்க மாட்டார்கள்.பா. விஜய்க்கும் எனக்கும் மிக பெரிய சண்டை வரும். சில நேரங்களில் யுவனிடம் புகார் செய்வார். யுவன் பயங்கர டார்ச்சர் செய்தால் கூட ஹாப்பி இருப்பார். யுவன் சாதுவான ஆல் இல்லை பயங்கர அராத்து.பிரேம்ஜி வைத்து படம் எடுக்க போரேன் என்று பிராங்க் செய்தார் என்று கூறினாா்.
இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா பேசுகையில் நாங்கள் அனைவரும் இந்த படத்திற்காக முடிந்த அளவிற்கு முழு உழைப்பை கொடுத்து உள்ளோம். இது எனக்கு மிகவும் நெருக்கமான படம். நானும் விஷ்ணுவும் ஒருவருக்கு ஒருவர் புரிந்து கொள்வோம். அப்பாவின் பாடல்களை இந்த சந்தர்ப்பத்தில் இதை கேட்கலாம். ஹீரோ இன்ட்ரோவில் – பொதுவாக என் மனசு தங்கம், ஹீரோயின் ஹீரோ சந்திப்பில் – தென்றல் வந்து தீண்டும், ஹீரோ ஹீரோயின் காதல் – கொடியிலே மல்லிகை பூ, ஹீரோ ஹீரோயின் பிரிவு, சுந்தரி கண்ணால் ஒரு செய்தி. இது பொன்ற பாடல்களை கேட்கலாம் என்றாா்.
திரைப்படத்தின் நடிகர் ஆகாஷ் முரளி பேசும் பொழுது, ரொம்ப நடுக்கமாக உள்ளது. என்னுடைய குரு விஷ்ணு வர்தன் என் மீது எனக்கு நம்பிக்கை இல்லாத போது நீங்கள் நம்பிக்கை வைத்தீர்கள். இந்த படத்தில் ரொம்ப பவர்ஃபுல் ரோல் செய்தார் சரத்குமார் சார். என் அப்பா ஆசைப்பட்ட விஷயம் நானும் என்னுடைய அண்ணனும் இந்த சினிமாவில் பார்க்க வேண்டும் என்று ஆசைப்பட்டார் ஆனால் அவர்தான் தற்போது இங்கு இல்லை.அவர் எங்கிருந்தாலும் அதை பார்த்துக் கொண்டிருப்பார் அப்பாவிற்கு ஒரு நன்றி.
நடிகர் சிவகார்த்திகேயன் பேசுகையில் அனைவருக்கும் இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். நீங்கள் எவ்வளவு உழைப்பை வேண்டுமானாலும் கட்டுங்கள் தமிழக மக்கள் உங்களை அங்கீகரிப்பார்கள் உங்கள் அப்பாவை அங்கீகரித்தது போல உங்களுக்கு ஒரு நல்ல மாமனார் கிடைத்திருக்கிறார். எனக்கு என்னுடைய மாமனார் ரொம்ப ஸ்பெஷல் .. அப்பொழுது நான் ஒரு எபிசோடு பண்ணினால் 4500 கிடைக்கும். எனக்கு பொண்ணு கொடுத்ததே பெரிய விஷயம்.. எனக்கு இன்னைக்கு என்னுடைய சினிமாவுக்கு சப்போர்ட் பண்ணுவோம் என்று என்னுடைய மாமா சொன்னார்.. இந்த மேடையில் என்னுடைய மனோ மாமாவிற்கு நான் நன்றி சொல்ல வேண்டும் என்று நினைக்கிறேன். என்னுடைய கனவை நோக்கி செல்ல என்னுடைய மாமனார் உதவியாக இருந்தார் மாமனார் என்பது ஒரு அருமையான உறவு.
யுவன் சங்கர் ராஜா மற்றும் விஷ்ணுவர்தன் சேர்ந்தால் ஒரு நல்ல காம்பினேஷன். நான் காலேஜ் படிக்கும் போது சினிமா பார்ப்பது பாட்டு கேட்பது தான். சேர்ஷா படம் என்ன மேஜிக் செய்ததோ அந்த படத்தை நேசிப்பாயா செய்யும் என்று நம்புகிறேன்.பெரிய சிக்சராக அடியுங்கள். அதித்தியிடம் சொல்லிக் கொண்டிருந்தேன் இதை எழுச்சியோடு செய்யுங்கள் என்று.சரத்குமார் சாரோடு நடிக்க எனக்கு இன்னும் வாய்ப்பு கிடைக்கவில்லை அவர் இன்னும் இளமையாக இருக்கிறார். மிக விரைவில் ஒரு செம படம் பண்ணுவோம் அதை உங்களை வேறு பரிமாணத்தில் காட்டும்படி இருக்கும் அந்த மாதிரி ஒரு படத்துடன் நான் சந்திக்கிறேன் என்றும்.
யுவன் சங்கர் ராஜா ஒரு கோட் எப்படி இருக்கீங்க கிரேட் டஸ்ட் ஆஃப் ஆல் டைம் போன்று நீங்கள். எல்லோருக்கும் ஒரே மாதிரியான பாடல்களை கொடுத்திருக்கிறீர்கள் அது உங்களுடைய அப்பாவிடம் இருந்து வந்திருக்கும் என்று நினைக்கிறேன். ஒரு நாள் இரவில் யுவன் சங்கர் ராஜா பாடல்களை கேட்டுக் கொண்டு வந்து அவருக்கு போன் செய்து பேசினேன். யுவன் சங்கர் ராஜா பாடல்களை கேட்பதற்கு கோடிக்கணக்கான மக்கள் இருக்கிறார்கள்.
அமரன் படம் தமிழில் ஒரு சேர்ஷா என்று மக்கள் சொன்னார்கள். யுவன் சங்கர் ராஜா பாடல்களை கேட்கும் பொழுது கல்லூரி கால நினைவுகள் ஞாபகம் வருகிறது. பொங்கலுக்கு வரும் அனைத்து படங்களுக்கும் என்னுடைய வாழ்த்துக்கள். சிவகார்த்திகேயன் பேசும் போது பாலா நீங்க தற்பொழுது லட்சத்தில் சம்பளம் வாங்குவார் என்று கூறினார்.அதற்கு பாலா நன்றி சார் என்னுடைய சம்பளத்தை ஏற்றி விட்டதுக்கு. அதர்வாவை பற்றி நான் எதுவும் பேசவில்லை ஏனென்றால் அது நம்ம படத்தின் பொழுது நான் பேசிக் கொள்கிறேன். இந்தப் படத்தில் அதர்வாவின் ரோல் ரொம்ப ஸ்பெஷல் என்றாா்.
திரைத்துறையில் 50 ஆண்டுகளை நிறைவு செய்யும் ரஜினி….. ரீ ரிலீஸுக்கு தயாராகும் ‘படையப்பா’!