உலகின் தலைசிறந்த தபேலா கலைஞர்களில் ஒருவரான ஜாகீர் உசேன் காலமானார். இதயப் பிரச்னையால் அவதிப்பட்டு வந்த ஜாகிர், அமெரிக்காவில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். நடிகர்கள் முதல் இசைக் கலைஞர்கள் வரை அனைவரும் அவரது ரசிகர்களாக இருந்தனர். ஜாகிர் ஹுசைன் ஒரு தபேலா வாசிப்பாளராக மட்டுமல்லாமல், ஒரு அற்புதமான இசையமைப்பாளராகவும் இருந்தார். உலகை மகிழ்வித்த ஹுசைன் தபேலா வாசிப்பது சிறு வயதில் அவரது தாய்க்கு பிடிக்கவில்லை.
ஜாகிர் உசேனின் தாய் தன் மகன் இசைத் துறையை தேர்ந்தெடுப்பதை அவரது விரும்பவில்லை. இதுபற்றி ஜாகீர் ஒருமுறை கூறுகையில், ‘‘ஆம், நான் தபேலா வாசிக்க ஆரம்பித்தபோது, இசையமைப்பாளர்களோ அல்லது இசைக்கருவிகளை வாசித்தவர்களோ மதிக்கப்படவோ, சம்பளம் வாங்கவோ இல்லை. நான் கச்சேரிகளுக்குச் சென்று பணத்திற்குப் பதிலாக உணவுப் பொட்டலங்களோடு வீடு திரும்புவதை என் அம்மா பார்த்திருக்கிறார். பணத்திற்குப் பதிலாக எனக்கு உணவு மட்டுமே கிடைத்தது. அதனால் நான் தபேலா வாசிப்பதை என் அம்மா விரும்பவில்லை. நான் நல்ல வேலை செய்து நிறைய பணம் சம்பாதிக்க வேண்டும் என்று அவர் விரும்பினார்.
ஆனால், ஜாகீருக்கு இசை மீது மட்டுமே நாட்டம் இருந்தது. அம்மா தடையாக இருந்ததால் ஜாகீர் உசேன் பலமுறை வீட்டை விட்டு ஓட முயன்றார். 6 வயதில், ஜாகிர் தனது உறவுக்கார அண்ணனிடம் “வா அண்ணா… நாம் ஓடிவிடுவோம். நீ ஒரு பாடலைப் பாடு. நான் இசை அமைக்கிறேன்” என்று பல முறை அழைத்துள்ளார். பல சமயங்களில், ஜாகிர் வீட்டை விட்டு வெளியேற தனது பள்ளி பையில் துணிகளை எடுத்துக் கொண்டு கிளம்பி இருக்கிறார். ஆனால், அவரது தந்தையின் எண்ணங்களால், அவர் வீட்டை விட்டு கிளம்புவதை தவிர்த்துள்ளார்.
ஜாகீர் உசேன் தன்னை சரஸ்வதி தேவி, கணபதியின் பக்தனாகக் கருதினார். ஒரு முஸ்லீம் குடும்பத்தில் ஒரு குழந்தை பிறக்கும்போதெல்லாம், தந்தை குழந்தையை தனது கையில் பிடித்து, குர்ஆனிலிருந்து சில பிரார்த்தனைகளை காதில் கூறுவார்கள். ஆனால் ஜாகீ பிறந்தபோது அவரது தந்தை காதுகளில் தபேலாவின் தாளத்தை புகுத்தினார். ஜாகிர் ஹுசைனின் தாயார், அவரது தந்தையின் இந்த செய்கைகளை கண்டு திகைத்து போனார். கணவனை ஏன் இப்படி செய்கிறீர்கள்? என்று சண்டை போட்டுள்ளார்.
நான் அன்னை சரஸ்வதி மற்றும் விநாயகப் பெருமானின் பக்தன், இவை எனது பிரார்த்தனைகள் என்று ஜாகீரின் தந்தை பதிலளித்துள்ளார்.
ஜாகிர் உசேனுக்கு நம்பர் , நம்மபர்-2 ஆட்டம் பிடிக்கவே இல்லை. உலகமே அவரை சிறந்த தபேலா கலைஞராகக் கொண்டாடினாலும், அவரது சிந்தனை மிகவும் வித்தியாசமானது. இது தொடர்பான ஒரு சம்பவத்தை விவரித்த ஜாகிர் ஹுசைன், “நாங்கள் வேறுப் நாட்டிற்கு செல்ல குடியேற்ற செயல்முறையை முடித்துக் கொண்டிருந்தது எனக்கு நினைவிருக்கிறது. அவர்கள் என்னைப் பார்த்ததும், எனது பெயர், பாஸ்போர்ட்டைச் சரிபார்க்க வேண்டும் எனக்கூறி ஓரிடத்திற்கு அழைத்துச் சென்றனர். விசாரிக்கும்போது என்னிடம் ரவிசங்கரை உங்களுக்குத் தெரியுமா? என்று கேட்டனர். ‘ஆம்’ என்றேன். அப்போது அவர்கள் என்னிடம் ரவிசங்கருக்குப் பிறகு 2வது இடத்தில் இருப்பது யார்? எனக் கேட்டனர். அப்போது என் மனைவி சொன்னாள், ‘‘என் கணவான இவர்தான் இரண்டாம் இடத்தில் இருக்கிறார். அவரை கூகுள் செய்து பாருங்கள்” என்றார்.
இந்த சம்பவத்திற்கு பிறகு ‘நாம் அனைவரும் நம்பர் ஒன், நம்பர் 2க்கு பின்னால் ஓடுகிறோம். ஆனால் உலகில் குறைந்தது 10 முதல் 15 தபேலா கலைஞர்கள் என்னைப் போல் தபேலா வாசிக்கிறார்கள். அவர்கள் சில நாட்களில் என்னை விட நன்றாக தபேலா வாசிப்பார்கள். அதனால் இந்த நம்பர் விளையாட்டில் எனக்கு நாட்டம் இல்லை’’ எனத் தெரிவித்து இருந்தார்.