கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த ஆஸ்டின் இன்பராஜ் (வயது 54) 19 வயதில் வேலை தேடி சென்னைக்கு வந்த ஆஸ்டின் பைனான்சியர் கலெக்சன் வேலை செய்து வந்திருந்தார் ஆனால் அதில் போதிய வருமானம் கிடைக்காததால் கார்களை திருடி விற்பனை செய்யும் கார் திருடனாக உலா வந்துள்ளார்.
தமிழ்நாட்டில் 30க்கும் மேற்பட்ட கார்களை திருடி காரின் உதிரி பாகங்களை மாற்றியும் நம்பர் பிளேட்டை மாற்றி விற்பனை செய்து உள்ளார். ஆஸ்டின் மீது தமிழ்நாடு முழுவதும் மொத்தம் 30-க்கும் மேற்பட்ட கார் திருட்டு வழக்குகள், 2 வீடு புகுந்து திருடிய வழக்குகள் நிலுவையில் உள்ளது.
இந்நிலையில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 5ஆம் தேதி சிறையில் இருந்து வெளியே வந்த ஆஸ்டின் மீண்டும் கைவரிசை காட்டத் தொடங்கினார். கடந்த ஜனவரி மாதம் 19 ஆம் தேதி வண்ணாரப்பேட்டையை சேர்ந்த அனுசுயா என்பவரின் கார் வீட்டின் அருகே நிறுத்தி வைத்து விட்டு சென்றுள்ளார். காலையில் காரை எடுப்பதற்காக வந்து பார்த்த பொழுது கார் காணாமல் போனது தெரியவந்தது.
உடனடியாக அனுசுயா வண்ணாரப்பேட்டை காவல்நிலத்தில் புகார் அளித்தார் புகார் பேரில் போலீசார் அங்கிருந்து சிசிடிவி காட்சிகளை ஆய்வு மேற்கொண்டனர். இதனை அடுத்து கார் திருடும் குற்றவாளிகளின் செல்போன்களை நோட்டமிட்ட பொழுது ஆஸ்டின் இன்பராஜன் செல்போன் வண்ணாரப்பேட்டையில் சம்பவம் நடந்த அன்று நண்பர்களுடன் பேசியது தெரியவந்தது.
பின்னர் ஆஸ்டின் இன்பராஜ் செல்போன் டவர் லொகேஷன் கண்காணித்து பாண்டிச்சேரியில் உறவினர் நிகழ்ச்சிக்காக பங்கேற்று இருந்த பொழுது போலீசார் சுற்றி வளைத்து வண்ணாரப்பேட்டை காவல் நிலையம் அழைத்து வந்தனர். விசாரணையில் காரின் பின்பக்க கண்ணாடியை உடைத்து உள்ளே சென்று காரை ஸ்டார்ட் செய்து எடுத்துச் சென்றது தெரியவந்தது. திருடும் கார்களை பாண்டிச்சேரி தூத்துக்குடி கன்னியாகுமரி உள்ளிட்ட பகுதிகளில் நம்பர் பிளேட்டுகளை மாற்றியும் உதிரி பாகங்களை மாற்றியும் விற்பனை செய்து வந்தது தெரிய வந்துள்ளது.
இதனை அடுத்து கார் திருடும் ஆஸ்டின் இன்பராஜ் கார் உதிரி பாகங்களை மாற்றும் சூளைமேட்டை சேர்ந்த ரவி திருடும் காரை விற்பனை செய்யும் தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் சேர்ந்த பார்வதி ராஜா என்ற பாரதி ஆகிய மூன்று பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர். அவர்கள் பயன்படுத்திய இருசக்கர வாகனம் மற்றும் திருடிய காரை வண்ணாரப்பேட்டை போலீசார் பறிமுதல செய்தனர்.