சென்னை நந்தனம் விரிவாக்கம் ஏழாவது தெருவில் நடிகர் பார்த்திபனின் அலுவலகம் இயங்கி வருகிறது..பாா்த்திபன் அவா்கள் சில நேரங்களில் அலுவகலகத்திலேயே தங்கிவிடுவாா்.சில தினங்களுக்கு முன் தனது அரையில் வைத்த 12 சவரன் நகைபையை காணவில்லை என்று புகாா் அளித்துள்ளாா்.
சில நேரங்களில் அலுவலகத்திலேயே பார்த்திபன் தங்கி விடுவாராம். இந்த நிலையில் சில தினங்களுக்கு முன் 12 சவரன் நகையுடன் ஒரு கைப்பையை அலுவலகத்தில் உள்ள தனது அறையில் வைத்துள்ளார். நேற்று முன்தினம் பார்த்தபோது நகைப்பையை காணவில்லை. தனது அலுவலகத்தில் 6 பேர் உதவியாளர்களாக பணியாற்றுவதாகவும் அவர்களை விசாரித்து காணாமல் போன நகையை மீட்டுத் தருமாறு நடிகர் பார்த்திபன் சார்பில் சைதாப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.
இந்த நிலையில் கடந்த ஒரு மாதத்துக்கு முன் பணிக்கு சேர்ந்த உதவியாளர் கிருஷ்ண காந்த், நகைப்பை அலுவலகத்திலேயே இருப்பதாக தெரிவித்துள்ளார்.பார்த்திபனின் அலுவலகத்தில் பணியாற்றும் ஹரி என்பவர் சைதாப்பேட்டை காவல் நிலையத்தை தொடர்பு கொண்டு நகை கிடைத்து விட்டதாகவும், புகாரை வாபஸ் பெற்றுக் கொள்வதாகவும் கூறியதாக சைதாப்பேட்டை போலீசார் தெரிவித்துள்ளனர்.