தொடர்ந்து திக்! திக்! சம்பவங்கள் …
காரைக்குடியில் பூட்டியிருந்த வீட்டின் கதவை உடைத்து வைர நகை உட்பட 50 பவுன் தங்க நகைகள் மற்றும் ஒரு லட்சம் பணம் திருட்டு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அண்ணா நகர் பாவேந்தர் சாலையில் வசிப்பவர் லெனின். இவர் கடந்த வாரம் வீட்டை பூட்டி விட்டு வெளிநாடு (சிங்கப்பூர்) சென்றிருந்த நிலையில் நோட்டமிட்ட மர்ம நபர்கள் வீட்டின் முன்பக்க கதவு பூட்டை உடைத்து உள்ளே சென்று பீரோவில் இருந்த வைர நகை உள்பட 50 பவுன் தங்க நகைகள் மற்றும் ஒரு லட்சம் ரொக்க பணத்தை திருடி சென்றுள்ளனர். லெனின் கொடுத்த புகாரில் காரைக்குடி வடக்கு காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
காரைக்குடி பகுதியில் கடந்த ஒரு மாதங்களுக்கு மேலாக பூட்டி இருந்த வீட்டை மட்டும் நோட்டமிட்டு மர்மகும்பல் தொடர் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டு வருவதால் பொதுமக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.