Homeசெய்திகள்க்ரைம்நோயாளியை பார்க்க வந்தவரிடம் வழிப்பறி செய்ய முயன்ற இருவர் கைது

நோயாளியை பார்க்க வந்தவரிடம் வழிப்பறி செய்ய முயன்ற இருவர் கைது

-

நோயாளியை பார்க்க வந்தவரிடம் வழிப்பறி செய்ய முயன்ற இருவர் கைது

சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் நோயாளியை பார்க்க வந்தவரிடம் செல்போன் மற்றும் பணத்தை கேட்டு மிரட்டி வழிப்பறி செய்ய முயன்ற இருவரை போலீசார் கைது செய்தனர்.

பெரம்பூர் நெட்டல் கார்டனை சேர்ந்தவர் விக்னேஷ் (28) தனியார் உணவு டெலிவரி வேலை செய்து வருகிறார்.  இவர் நேற்று அவரது நண்பரின் தந்தை அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளவரை பார்க்க சென்றார்.

நோயாளியை பார்க்க வந்தவரிடம் வழிப்பறி செய்ய முயன்ற இருவர் கைது

அப்போது அவசர சிகிச்சை பிரிவு கட்டிடம் பின்புறம் வழியாக வந்தபோது அங்கு இருந்த 2 மர்ம நபர்கள் விக்னேஷை வழிமறித்து கத்தியை காட்டி செல்போன், பணம், புளூடூத் ஹெட்போனை கேட்டு மிரட்டி பறிக்க முற்பட்டபோது அங்கிருந்து தப்பி ஓடி வந்து, சம்பவம் குறித்து விக்னேஷ் உடனடியாக அருகில் இருந்த போலீசாரிடம்  புகார் தெரிவித்தார்.

அவர்கள் வந்து பார்த்தபோது மர்ம நபர்கள் அங்கு இல்லை அதை தொடர்ந்து  போலீசார் அங்கிருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை வைத்து ஆய்வு மேற்கொண்டனர்.

நோயாளியை பார்க்க வந்தவரிடம் வழிப்பறி செய்ய முயன்ற இருவர் கைது

அதில் பெரம்பூர் திரு.வி.க. நகரை சேர்ந்த வேலாயுதம் (26) ஆட்டோ டிரைவர்.  பாடியநல்லூர் மகாமேடு நகரை சேர்ந்தவர் வெங்கடேசன் (23) தனியார் வங்கி ஊழியர். இருவரும் விக்னேஷிடம் வழிப்பறி செய்தது கண்காணிப்பு கேமராவில் தெரிந்தது.

மேலும் விசாரணையில் வேலாயுதம் மீது 15 கொள்ளை, வழிப்பறி வழக்குகள் உள்ளது என தெரியவந்தது. அதன் பெயரில் வேலாயுதம், வெங்கடேசனை பெரம்பூரில் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

MUST READ