மனைவியை சரமாரியாக கத்தியால் குத்திய கணவன். நடத்தையில் சந்தேகம் !
திருப்பூர் துளசிராவ் வீதியைச் சேர்ந்த ராமமூர்த்தி (42).அவரது மனைவி சத்யா(36). இவர்களுக்கு திருமணம் ஆகி 12 வருடங்களான நிலையில் 2 மகன்கள் மற்றும் ஒரு மகள் உள்ளனர். சத்யா அருகிலுள்ள பின்னலாடை நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். சமீபகாலமாக சத்யாவின் நடத்தையில் ராமமூர்த்தி சந்தேகம் அடைந்து வந்துள்ளார். இதனால் இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.
கடந்த 9ம் தேதி விடுமுறை தினம் என்பதால் இருவரும் வீட்டில் இருந்துள்ளனர். அப்போது இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த ராமமூர்த்தி வீட்டில் இருந்த கத்தியை எடுத்து சத்யாவின் கழுத்து , வயிறு மற்றும் மார்பு உள்ளிட்ட பகுதிகளில் குத்தியுள்ளார். ரத்த வெள்ளத்தில் சத்யா விழுந்துள்ளார்.
பிரபல நடிகை லாவண்யா திரிபாதிக்கு கால் முறிவு… ரசிகர்கள் பிரார்த்தனை….
ராமமூர்த்தி ரத்த கரையுடன் திருப்பூர் தெற்கு காவல் நிலையத்திற்கு சென்று நடந்த சம்பவத்தை தெரிவித்துள்ளார். உடனடியாக காவல்துறையினர் ராமமூர்த்தியின் இல்லத்திற்கு சென்ற போது அருகில் இருந்தவர்கள் உதவியுடன் சத்யா 108 ஆம்புலன்ஸ் மூலம் திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். தொடர்ந்து அங்கு அவருக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.
தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனளிக்காமல் சத்யா இன்று காலை உயிரிழந்தார். இதனைத் தொடர்ந்து ராமமூர்த்தி மீது காவல்துறையினர் கொலை வழக்கு பதிவு செய்துள்ளனர்.