Homeசெய்திகள்க்ரைம்ஒரே பெட்ரோல் பங்கை பலருக்கு விற்று 10 கோடி மோசடி - காவல் கண்காணிப்பாளரிடம்...

ஒரே பெட்ரோல் பங்கை பலருக்கு விற்று 10 கோடி மோசடி – காவல் கண்காணிப்பாளரிடம் புகார்

-

- Advertisement -

நந்தீஸ்வர மங்கலம் கிராமத்தை சேர்ந்த சுஜாதா என்பவருக்கு சொந்தமான பெட்ரோல் விற்பனை நிலையத்தை விற்பனை செய்வதாக கூறி ஒரே பெட்ரோல் பங்கை பத்து பேரிடம் விற்பனை செய்து 10 கோடி ரூபாய் மோசடி செய்துள்ளதாக காவல் கண்காணிப்பாளரிடம் புகார் அளித்துள்ளனா்.ஒரே பெட்ரோல் பங்கை பலருக்கு விற்று 10 கோடி மோசடி -  காவல் கண்காணிப்பாளரிடம் புகார்

கடலூர் மாவட்டம் ஆனைவாரி பகுதியை சேர்ந்த நிஜந்தன்,  உஷாராணி உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்டோர் இன்று கடலூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஜெயக்குமாரை சந்தித்து மனு அளித்தனர். அப்போது அவர்கள் கடலூர் மாவட்டம் நந்தீஸ்வர மங்கலம் கிராமத்தை சேர்ந்த சுஜாதா என்பவருக்கு சொந்தமான பெட்ரோல் விற்பனை நிலையத்தை விற்பனை செய்வதாக கூறி அவருடைய கணவர் செல்வராஜ் என்பவர் தங்களிடம் பேசி 85 லட்சம் ரூபாய் கடந்த மார்ச் மாதம் முன் தொகையாக பெற்றுக் கொண்டதாகவும் அதன் பிறகு பெட்ரோல் பங்கை தன்னுடைய பெயருக்கு மாற்றம் செய்யவில்லை எனவும் அதன் பிறகு விசாரித்த போது தான் தன்னை போல் 10 பேரிடம் பெட்ரோல் பங்கை காட்டி விலைபேசி பணத்தை பெற்று அவர்களை ஏமாற்றி வருவதாக தெரிய வந்ததாகவும் இதுவரையில் 10 பேரிடம் 10 கோடி ரூபாய் அளவிற்கு அவர் மோசடி செய்திருப்பதாக அவர் புகார் அளித்தார்.

மேலும் இதே போல் 140 பேரிடம் ரியல் எஸ்டேட் தொழிலில் அதிக லாபம் கிடைக்கும் எனக் கூறி அவர்களிடமும் 7.5 கோடி ரூபாய் அளவிற்கு மோசடி செய்துள்ளதாக அவர்கள் கடலூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரிடம் புகார் அளித்தனர். தொடர்ந்து தன்னுடைய பணத்தைக் கேட்கும் போதெல்லாம் செல்வராஜ் மற்றும் அவரது உறவினர்கள் இணைந்து கொலை மிரட்டல் விடுவதுடன் தங்களுக்கு பணத்தை கொடுக்க முடியாது என்ன செய்ய முடியுமோ செய்து கொள்ளுங்கள் எனவும் கூறுவதாகவும் காவல் நிலையத்திற்குச் சென்றார் இவருடைய உறவினர் ஒருவர் டிஜிபி அலுவலகத்தில் இருந்து கொண்டு காவல் நிலையங்களுக்கு போன் செய்து உயரதிகாரி பேசுவது போல் அவர்களை மிரட்டுவதால் காவல் நிலையத்திலும் நடவடிக்கை எடுக்க பயப்படுவதாக அவர்கள் தெரிவித்தனர்.

எனவே ஏமாற்றப்பட்டவர்களுக்கு மீண்டும் பணத்தைப் பெற்றுத் தர உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரிடம் கோரிக்கை வைத்தனர். இந்த புகாரின் மீது உடனடி நடவடிக்கை எடுக்க சேத்தியாதோப்பு காவல் நிலையத்திற்கு கடலூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஜெயக்குமார் உத்தரவிட்டுள்ளார்.

அந்த 55 நிமிடங்கள்… சைஃப் அலி கானைத் தாக்கியவரின் பதற வைக்கும் அந்த 2 வீடியோக்கள்..!

MUST READ