கொடுங்கையூர் பகுதியில் 10 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த மீன் வியாபாரி மீது போக்சோ சட்டம் பாய்ந்தது.சென்னை கொடுங்கையூர் பகுதியை சேர்ந்தவர் மீனா 31 (பெயர் மாற்றப்பட்டுள்ளது) இவருக்கு திருமணமாகி இரண்டு பெண் பிள்ளைகள் உள்ளனர். இரண்டாவது மகள் அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் நான்காம் வகுப்பு படித்து வருகிறார் . இவருக்கு 10 வயது ஆகிறது கடந்த 15ஆம் தேதி மதியம் சிறுமி பக்கத்து வீட்டில் விளையாட சென்று உள்ளார் அப்போது அந்த வீட்டில் குடியிருக்கும் மீன் வியாபாரியான நல்லமுத்து என்பவர் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார்.
மேலும் இந்த விஷயத்தை வெளியே சொன்னால் சிறுமியை கொன்று விடுவதாக மிரட்டியுள்ளார் . இதுகுறித்து நேற்று முன்தினம் இரவு தனது தாய் மீனா விடம் நடந்தவற்றை சிறுமி கூறினார். இதனால் ஆத்திரம் அடைந்த மீனா மற்றும் அவரது உறவினர்கள் நல்லமுத்து வீட்டிற்கு சென்று அவரை சரமாரியாக தாக்கியுள்ளனர். இதில் முகத்தில் பலத்த காயம் அடைந்த நல்லமுத்து ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார். சம்பவம் தொடர்பாக மீனா எம் கே பி நகர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் நேற்று போக்சோ சட்டத்தின் கீழ் கொடுங்கையூரைச் சேர்ந்த மின் வியாபாரி நல்லமுத்து 49 என்பவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் தற்போது நல்லமுத்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
பள்ளி மாணவிகளிடம் பாலியல் சீன்டல் – ஓவிய ஆசிரியர் போக்சோவில் கைது