Homeசெய்திகள்க்ரைம்காங்கிரஸ் நிர்வாகியின் 100 கோடி ரூபாய் சொத்திற்கு போலி ஆவணம் தயாரித்த - 3 பேர்...

காங்கிரஸ் நிர்வாகியின் 100 கோடி ரூபாய் சொத்திற்கு போலி ஆவணம் தயாரித்த – 3 பேர் கைது

-

- Advertisement -

ஆவடியில் காங்கிரஸ் கட்சியின் மாநில நிர்வாகியின் 100 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்கு போலி ஆவணங்கள் தயாரித்து மோசடியில் ஈடுபட்ட மூன்று பேரை குற்றப்பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர்.காங்கிரஸ் நிர்வாகியின் 100 கோடி ரூபாய் சொத்துக்கு போலி ஆவணம் தயாரிப்பு - 3 பேர் கைதுஆவடியில் பிரபல தொழிலதிபர் பவன்குமார். இவர் காங்கிரஸ் கட்சியின் மாநில விவசாய அணி தலைவராக இருந்து வருகிறார். இவருக்கும் இவருடைய குடும்ப உறுப்பினர்களுக்கும் சொந்தமான சுமார் 100 கோடி ரூபாய் மதிப்புள்ள 12.38 ஏக்கர் நிலம் ஆவடி அருகே பாலேரிப்பட்டில் உள்ளது. இந்த நிலத்திற்கு போலி ஆவணங்கள் தயாரித்து பவன்குமாரை மிரட்டி வருவதாக கூறப்படுகிறது.

இது தொடர்பாக ஆவடி காவல் ஆணையரக மத்திய குற்றப்பிரிவு போலீசாரிடம் பவன்குமார் கடந்த 19.11.2024 ம் தேதி புகார் கொடுத்துள்ளார்.

அந்த புகாரில் கடந்த 09.11.2010 ம் தேதி ஆவடியை சேர்ந்த தயாளன் மற்றும் அவருடைய பவர் ஏஜன்ட் காண்டியபன் என்பவரிடமிருந்து ஆவடி அருகே பாலேரிபட்டு கிராமத்தில் உள்ள பல்வேறு சர்வே எண்கள் அடங்கிய 12 ஏக்கர் 38 செண்ட் நிலத்தை போது அதிகார ஆவண எண்களான 2157/2010 மற்றும் 2158/2010 ன் படி பெற்றும் அதெ நாளில் ஆவண எண். 7946/2011, 7947/2011. 7948/2011, 7949/2011, 126/2011, 10030/2011, 10034/2011, 10035/2011, 10036/2011, 10680/2011 மற்றும் 915/2012 ஆகிய ஆவணங்கள் மூலம் பவுன் குமார் ஆகிய நானும் என் உறவினர்கள் பெயரில் கிரையம் பெற்று ஆண்டு அனுபவித்து வருகிறோம்.

இந்நிலையில் மேற்படி தயாளன் அவரது மனைவி வனஜா மகன் சுதர்சன் மகள்கள் சுபத்ரா மற்றும் சுகன்யா ஆகியோர்கள் ரமேஷ் மற்றும் சங்கரநாராயணன் என்பவர்களுடன் சேர்ந்து கொண்டு 2009 ம் வருடம் மேற்படி நிலங்களை கிரைய ஒப்பந்தம் ஏற்படுத்தியது போல பதிவு செய்யப்படாத போலியான முன்தேதியிட்ட விற்பனை ஒப்பந்த ஆவணத்தை தயார் செய்து வைத்துக்கோண்டு என்னையும் என் குடும்பத்தினரையும் மிரட்டி கோடிக்கணக்கில் பணம் கேட்டு மிரட்டுவதாக அந்த புகாரில் தெரிவித்துள்ளார்.

அந்த புகாரின் மீது விசாரணை நடத்திய ஆவடி மத்திய குற்றப்பிரிவு போலீசார், EDF-III பிரவில் வழக்கு எண். 133/2024, U/s.465,467,468,420, 506(i) r/w 120(b) IPC ன் படி வழக்கு பதிவு செய்தனர்.

ஆவடி காவல் ஆணையாளர் சங்கர் அவர்களின் உத்தரவுப்படி விசாரணை மேற்கொண்டதில் குற்றவாளிகள் தயாளன் அவருடைய மகன் த.சுதர்சன், மற்றும் ரமேஷ் (எ) ரமேஷ்கார்த்திக்,(53) ஆகிய மூன்று பேரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

ஆவடியில் காங்கிரஸ் கட்சியின் மாநில விவசாய அணி தலைவரை போலி ஆவணங்கள் கொண்டு மிரட்டி பணம் பறிக்க முயன்ற நபர்களை கைது செய்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆவடி அருகே முன்விரோதம் காரணமாக சரித்திர பதிவேடு குற்றவாளி கொலை!

MUST READ