Homeசெய்திகள்க்ரைம்தேவக்கோட்டையில் ஆசிரியர் வீட்டில் பட்டப்பகலில் 180 சவரன் நகைகள் கொள்ளை! 

தேவக்கோட்டையில் ஆசிரியர் வீட்டில் பட்டப்பகலில் 180 சவரன் நகைகள் கொள்ளை! 

-

தேவகோட்டையில் ஆசிரியர் தம்பதியினர் வீட்டில் பட்டப்பகலில் கதவை உடைத்து 180 சவரன் நகைகள் மற்றும் பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை ராம்நகர் தில்லைநகர் 6-வது வீதியில் வசித்து வருபவர் சஞ்சீவி ஞானசேகர் (58). இவர் தேவகோட்டை நகரத்தார் மேல்நிலைப் பள்ளியில் முதுகலை வரலாற்று ஆசிரியராக உள்ளார். இவரது மனைவி ஜெயராணி, கண்ணங்குடி ஒன்றியம் நானாக்குடி கிராமத்தில் தொடக்கப் பள்ளி ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவர்களது மகள் அங்குள்ள தபால் நிலையத்தில் தற்காலிக பணியாளராக பணிபுரிந்து வருகிறார்.

இந்த நிலையில் இன்று காலை ஆசிரியர் சஞ்சீவி ஞானசேகர், அவரது மனைவி ஆகியோர் வழக்கம்போல் பணிக்கு புறப்பட்டு சென்றுள்ளனர். பின்னர் அவர்களது மகள் வீட்டின் உள்பகுதியை பூட்டாமல், கொசு வராமல் இருக்க அடைக்கப்பட்ட வெளி பகுதியை மட்டும் பூட்டிவிட்டு வேலைக்கு சென்றுள்ளார். பின்னர் மதிய உணவுக்காக அவர் வீட்டிற்கு வந்தபோது, வீட்டின் கதவு உடைக்கப்பட்டு உள்ளே இருந்த நகை மற்றும பணம் திருட்டு போயுள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த சஞ்சீவி ஞானசேகரின் மகள் தேவகோட்டை டவுன் போலீசில் புகார் அளித்தார்.

அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். சிவகங்கையில் இருந்து கைரேகை தடயவியல் நிபுணர்கள் வருகை புரிந்து தடயங்களை சேகரித்து சென்றனர். போலீஸ் மோப்பநாய் மோப்பம் பிடித்துச் சென்றது. தேவகோட்டை டிஎஸ்பி பார்த்திபன் தலைமையில் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். விசாரணையில் கொள்ளையர்கள் கொசுவலை கதவை உடைத்து வீட்டின் உள்ளே புகுந்துள்ளனர். பின்னர், லாக்கருக்கு அருகிலேயே வைக்கப்பட்டிருந்த சாவியை எடுத்து 180 சவரன் தங்கம், வெள்ளி நகைகள் மற்றும் பணத்தை கொள்ளையடித்து சென்றது தெரியவந்துள்ளது.  1

MUST READ