இலங்கை நாட்டிற்கு போதைப்பொருள் கடத்த முயன்ற இலங்கையைச் சேர்ந்த நபர் உட்பட இரண்டு பேர் கைது. 15 லட்ச ரூபாய் ரொக்கம் பறிமுதல்.
மத்திய போதை பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகளுக்கு கிடைத்த ரகசிய தகவல் அடிப்படையில் மூலக்கடை பேருந்து நிலையத்தில் சோதனையில் ஈடுபட்ட போது 1.9 கிலோ மெத்தப்டமைன் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது.
இந்த விவகாரத்தில் கன்னியாகுமரி அகதிகள் முகாமில் இருந்த விஜயகுமார் என்ற இலங்கையைச் சேர்ந்த நபர் சென்னைக்கு போதை பொருள் கடத்தி வரும்போது பறிமுதல். விஜயகுமாரின் கூட்டாளி மணிவண்ணனின் வீட்டில் சோதனை செய்தபோது 900 கிராம் மெத்தப்டமைன் பறிமுதல். கைது செய்யப்பட்ட இருவரும் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டனர்.