Homeசெய்திகள்க்ரைம்பண இரட்டிப்பு மோசடி 2 பேர் கைது

பண இரட்டிப்பு மோசடி 2 பேர் கைது

-

- Advertisement -

ரூ. 5 லட்சம் கொடுத்தால் ரூ. 10 லட்சம் தருவதாக கூறி வெற்று பேப்பர்களை வைத்து பண இரட்டிப்பு மோசடியில் ஈடுபடும் 2 பேரை ஒருங்கிணைந்த குற்றப்புலனாய்வு பிரிவு போலீசார் அதிரடியாக  கைது செய்தனர்.

பண இரட்டிப்பு மோசடி 2 பேர் கைதுசென்னை கோயம்பேடு பேருந்து நிலையம் அருகில் பண இரட்டிப்பு மோசடி நடப்பதாக ஒருங்கிணைந்த குற்றப்புலனாய்வு பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து ஒருங்கிணைந்த குற்றப்புலனாய்வு பிரிவு காவல் ஆய்வாளர் சாகுல் ஹமீது தலைமையிலான போலீசார் கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

அப்போது கோயம்பேடு பேருந்து நிலையத்தின் வெளி நுழைவுவாயில் பகுதியில் சந்தேகத்திற்கிடமான முறையில் சுற்றித் திரிந்த 2 பேரை பிடித்து சோதனை செய்ததில் ரூ. 48,500 மற்றும் 20 பண்டல்கள் கொண்ட ரூபாய் நோட்டு போல கட்டிங் செய்யப்பட்ட பேப்பர்கள் இருந்தது தெரிந்தது.

பண இரட்டிப்பு மோசடி 2 பேர் கைதுமேலும் நடத்திய விசாரணையில், அவர்கள் திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த கார் ஓட்டுனர் ஆசிக், புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த ரியல் எஸ்டேட் தொழில் செய்து வரும் சண்முகவேல் என்பது தெரிந்தது. இவர்கள்

ரூபாய் ஐந்து லட்சம் தொகை கொடுத்தால் பத்து லட்சம் இரட்டிப்பு தொகை தருவதாக ஆசை வார்த்தை சொல்லி நம்ப வைத்து மோசடியில் ஈடுபட முயன்றது தெரிந்தது.

பண கட்டுகளில் முன்புறமும், பின்புறமும் அசல் 500 ரூபாய் நோட்டுகளை வைத்து இடையே கட்டிங் பிளைன் பேப்பர்களை வைத்து ரூபாய் கட்டுகளைப் போல காட்டி அசல் பணம் பெற்றுக்கொண்டு வெற்று தாள்களை கொடுத்து ஏமாற்றி செல்ல முயன்றது தெரிய வந்தது.

இதையடுத்து 2 பேரையும் கைது செய்து  சிஎம்பிடி காவல் நிலையத்தில் ஒருங்கிணைந்த குற்றப்புலனாய்வு பிரிவினர் ஒப்படைத்தனர். தற்போது சிஎம்பிடி போலீசார் 2 பேரையும் கைது செய்து யாரெல்லாம் மோசடி செய்து ஏமாற்றி உள்ளார்கள்? எத்தனை வழக்குகள் உள்ளது? என்பது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

MUST READ