Homeசெய்திகள்க்ரைம்மது போதையில் ஏஎஸ்பி வாகனத்தை வழி மறைத்து லிப்ட் கேட்ட 2 வாலிபர்கள் கைது

மது போதையில் ஏஎஸ்பி வாகனத்தை வழி மறைத்து லிப்ட் கேட்ட 2 வாலிபர்கள் கைது

-

- Advertisement -

மது போதையில் ஏஎஸ்பி வாகனத்தை வழி மறைத்து லிப்ட் கேட்ட 2 வாலிபர்கள் கைது

திருவள்ளூர் அருகே போலீஸ் ஏஎஸ்பி வாகனத்தை மது போதையில் வழி மறைத்து லிப்ட் கேட்ட 2 வாலிபர்களை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

திருவள்ளூர் உதவி காவல் கண்காணிப்பாளராக பணியாற்றி வருபவர் விவேகானந்தா சுக்லா. இவர் வழக்கமாக இரவு ரோந்து பணியை மேற்கொண்டு வந்த போது திருவள்ளூர் பேரம்பாக்கம் நெடுஞ்சாலை பிரையாங்குப்பம் வந்தபோது அங்கு சாலையில் போடப்பட்டிருந்த வேகத்தடை அருகே அவருடைய சைரன் போட்டு வந்த வாகனத்தை மதுபோதையில் இருந்த மூன்று இளைஞர்கள் வழிமறித்து உள்ளனர்.

மது போதையில் ஏஎஸ்பி வாகனத்தை வழி மறைத்து லிப்ட் கேட்ட 2 வாலிபர்கள் கைது
கைது செய்யப்பட்டவர்கள்

இதை அறிந்த போலீஸ் உதவி காவல் கண்காணிப்பாளர் அதிர்ச்சியடைந்து கீழே இறங்கி வந்த போது அவர் போலீஸ் கூட என தெரியாமல் அதிக மது போதையில்  இருந்த மூன்று இளைஞர்கள் திருவள்ளூர் செல்வதற்காக அவரிடமே லிப்ட் கேட்டுள்ளனர். அதைத்தொடர்ந்து போலீஸ் உதவி காவல் கண்காணிப்பாளர் லிப்ட் தருவது போன்று மூவறியும் தனது வாகனத்திலேயே ஏற்றிக்கொண்டு திருவள்ளூர் தாலுகா காவல் நிலையத்தில் ஒப்படைத்தார்.

அதைத் தொடர்ந்து மூவரில் ஒருவர் 18 வயது நிரம்பாத சிறுவர் என்பதால் அவரை போலீசார் பெற்றோரை வரவைத்து அறிவுரை செய்து கண்டித்து அனுப்பி வைத்தனர். அதைத் தொடர்ந்து பிரையாங்குப்பம் பகுதியைச் சேர்ந்த  நிஷாந்த் ( 20) சந்தோஷ் (28) வாலிபர்களை போலீசார் கைது செய்து திருவள்ளூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி திருவள்ளூர் கிளை சிறையில் அடைத்தனர்.

 

MUST READ