கனடாவில் 28 வயது இந்தியர் கொலை செய்யப்பட்ட அதிர்ச்சி சம்பவம்.
பஞ்சாப் மாநிலம் லூதியானாவைச் சேர்ந்த யுவராஜ் கோயல் (28 ) ஜூன் 7 ஆம் தேதி கனடாவின் சர்ரேயில் (Surrey) சுட்டுக் கொல்லப்பட்டார். நான்கு நபர்களை போலீசார் சந்தேக காவலில் எடுத்து சனிக்கிழமை முதல் நிலை கொலைக் குற்றம் சாட்டியுள்ளனர்.
முதற்கட்ட விசாரணையில் இது குறிவைத்து நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டு வழக்கு என்று புலனாய்வாளர்கள் கூறுகின்றனர். யுவராஜ் கோயல் கொல்லப்பட்டதற்கான காரணங்களை போலீசார் தீவிர வீசாரனை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்திய வம்சாவளியைச் சேர்ந்த யுவராஜ் கோயல் 2019 இல் மாணவர் விசாவில் கனடாவுக்கு குடிபெயர்ந்துள்ளார். மற்றும் சமீபத்தில் தனது கனேடிய நிரந்தர குடியிருப்பாளர் (பிஆர்) அந்தஸ்தையும் பெற்றுள்ளார்.
விற்பனை அதிகாரியாக பணியாற்றி வந்த யுவராஜ் கோயல் லூதியானாவில் ஒரு சாதாரண குடும்பத்தில் இருந்து வந்தவர். அவரது தந்தை, ராஜேஷ் கோயல், விறகு வியாபாரம் செய்து வருகிறார். யுவராஜ் டெல்லி பல்கலைக்கழகத்தில் வணிகவியல் இளங்கலை (ஹானர்ஸ்) பட்டப்படிப்பை முடித்துள்ளார்.
யுவராஜ் கோயல் எந்த குற்றப் பின்னணியும் இல்லாதவர் என்பது குறிப்பிடத்தக்கது. யுவராஜ் கோயல் கொலை வழக்கில் சந்தேகத்திற்குறிய நான்கு நபர்கள் – சர்ரேவைச் சேர்ந்த மன்வீர் பஸ்ரம் (23), வயதான சாஹிப் பாஸ்ரா (20), ஹர்கிரத் ஜுட்டி (23) மற்றும் ஒன்டாரியோவைச் சேர்ந்த கெய்லன் ஃபிராங்கோயிஸ் (20) கைது செய்யப்பட்டுள்ளனர்.
யுவராஜ் கோயல் கொலை செய்யப்பட்டதற்கான காரணத்தை போலீசார் மற்றும் புலனாய்வாளர்கள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.