Homeசெய்திகள்க்ரைம்கோவை அருகே டேங்கர் லாரி ஓட்டுநர்கள் தீ விபத்தில் 3 பேர் பலி

கோவை அருகே டேங்கர் லாரி ஓட்டுநர்கள் தீ விபத்தில் 3 பேர் பலி

-

கோவை சூலூர் அருகே டேங்கர் லாரி ஓட்டுநர்கள் தங்கி இருந்த அறையில் ஏற்பட்ட தீ விபத்தில் மூன்று பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர், மேலும் 4 பேர் 80 சதவீத தீக் காயங்களுடன் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கோவை அருகே டேங்கர் லாரி ஓட்டுநர்கள் தீ விபத்தில் 3 பேர் பலிகோவை மாவட்டம் சூலூர் அருகே உள்ள முத்துகவுண்டன்புதூரை  சேர்ந்தவர் திருமூர்த்தி.  இவர் தனக்கு சொந்தமான 10 வீடுகளை வாடகைக்கு விட்டுள்ளார். அதில் ஒரு வீட்டில் தனியார் பெட்ரோல் நிறுவனத்தில் ஓட்டுநர்களாக பணியாற்றி வரும் அழகர் ராஜா, சின்ன கருப்பு, முத்துக்குமார், பாண்டீஸ்வரன், மனோஜ், வீரமணி,  தினேஷ் ஆகிய 7 பேர் தங்கியுள்ளனர்.

இந்த நிலையில் நேற்று அறையில் இருந்த இவர்கள் மது அருந்திக் கொண்டிருந்ததாக தெரிகிறது, மேலும் நள்ளிரவு 12 மணி அளவில் பாண்டீஸ்வரன் சமையல் வேலை செய்து கொண்டிருந்தார்.  அப்போது கடைக்கு செல்வதற்காக அழகர் ராஜா இருசக்கர வாகனத்தை எடுத்த போது அதில் எரிபொருள் இல்லாததால்,  அறையில் வைத்திருந்த 10 லிட்டர் பிளாஸ்டிக் கேனில் வைத்திருந்த பெட்ரோலை ஒரு லிட்டர் பிளாஸ்டிக் கேனுக்கு மாற்ற முயன்றுள்ளார்.

அப்போது எதிர்பாராத விதமாக சமையல் கேஸில் இருந்து பரவிய தீ, பெட்ரோல் கேனில் பிடித்தது மேலும் பெட்ரோல் கேன் கீழே விழுந்து சிதறியதில் அறை முழுவதும் தீப்பிடித்து எறிந்தது.  அப்போது அறையில் இருந்த ஏழு பேரும் உள்ளே சிக்கிக் கொண்டு சத்தம் போட்டதால்,  அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து தீயை அணைக்க முயன்றனர். மேலும் அறையில் இருந்த  சமையல் எரிவாயுவிலும் தீ எரிந்ததால், அவர்கள் உடனடியாக சூலூர் தீயணைப்புத்துறை மற்றும் போலீசாருக்கு தகவல் அளித்தனர்.

விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் தீயை கட்டுக்குள் கொண்டு வந்து, சமையல் எரிவாயையும் வெளியே எடுத்து வந்தனர்.  பின்னர் உள்ளே சென்று உயிருக்கு போராடிக் கொண்டிருந்த பாண்டீஸ்வரன், மனோஜ், வீரமணி,  மற்றும் தினேஷ் ஆகிய நான்கு பேரை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.  அங்கு 80 சதவீதத்தை காயங்களுடன் உயிருக்கு போராடிவரும் அவர்களுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

கோவை அருகே டேங்கர் லாரி ஓட்டுநர்கள் தீ விபத்தில் 3 பேர் பலிமேலும் உள்ளே சிக்கிய சின்ன கருப்பு, முத்துக்குமார்,  அழகர்ராஜா ஆகிய மூன்று பேரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்ததும் தெரியவந்தது. மூன்று பேரின் உடலும் பிரேத பரிசோதனைக்காக கோவை இஎஸ்ஐ மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.  சம்பவம் தொடர்பாக சூலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில்,  சம்பவ இடத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரிநாராயணன் நேரில் ஆய்வு மேற்கொண்டு விசாரித்தார்.

போலீசாரின் முதல் கட்ட விசாரணையில் தேனி மாவட்டத்தை சேர்ந்த பெட்ரோல் டேங்கர் லாரி ஓட்டுனரான அழகர்ராஜா சூலூர் அருகே உள்ள ராவத்தூர் பகுதியில் லாரியை ஓட்டி வந்தபோது ஏற்பட்ட விபத்தில் தனியார் பள்ளி ஆசிரியை சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதையடுத்து அவரை போலீசார் பிடித்து விசாரணை மேற்கொண்ட நிலையில்,  மாலை அவரை ஜாமினில் வெளியே விட்டுள்ளனர்.  வெளியே வந்த அவர் மன உளைச்சலில் இருந்ததால் தனது நண்பர்களோடு சேர்ந்து மது குடித்துள்ளார்.

அப்போது பெட்ரோலை கையாண்டபோது இந்த விபத்து ஏற்பட்டதும் தெரியவந்தது.  தொடர்ந்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில் உயிருக்கு போராடிக் கொண்டிருக்கும் நபர்களிடம் கோவை மாவட்ட நீதிபதி நேரடியாக சென்று வாக்குமூலம் பெற்றார். கோவையில் லாரி ஓட்டுநர்கள் அறையில் ஒன்றாக மது குடித்து கொண்டிருந்தபோது திடீரென ஏற்பட்ட தீ  விபத்தில் மூன்று பேர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

MUST READ