Homeசெய்திகள்க்ரைம்திருப்பூரில் காரில் கள்ளச்சாராயம் கடத்திய 3 பேர் கைது 2 பேர் தப்பி ஓட்டம், 2...

திருப்பூரில் காரில் கள்ளச்சாராயம் கடத்திய 3 பேர் கைது 2 பேர் தப்பி ஓட்டம், 2 லிட்டர் கள்ளசாராயம் பறிமுதல்!!

-

- Advertisement -

திருப்பூர் தாராபுரம் சாலையில் காரில் கள்ளச்சாராயம் கடத்தி வருவதாக மாநகர மதுவிலக்கு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவல் அடிப்படையில் மாநகர மதுவிலக்கு காவல் ஆய்வாளர் பிரபா தேவி தலைமையிலான போலீசார் தாராபுரம் ரோடு உஷா தியேட்டர் பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.

திருப்பூரில் காரில் கள்ளச்சாராயம் கடத்திய 3 பேர் கைது 2 பேர் தப்பி ஓட்டம், 2 லிட்டர் கள்ளசாராயம் பறிமுதல்!!அப்போது அந்த வழியாக வந்த சொகுசு காரை வழிமறித்து சோதனை செய்தனர். போலீசார் சோதனையின் போது அந்தக் காரில் இருந்து திடீரென இரண்டு பேர் இறங்கி ஓட்டம் பிடித்தனர். தொடர்ந்து அந்த காரில் இருந்த மூன்று பேரிடம் விசாரணை நடத்தினர். மூன்று பேரும் அதிக மது போதையில் இருந்தது தெரிய வந்தது. இந்நிலையில் காரை சோதனையிட்ட போது காரில் 2 லிட்டர் கள்ளச்சாராயம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

திருப்பூரில் காரில் கள்ளச்சாராயம் கடத்திய 3 பேர் கைது 2 பேர் தப்பி ஓட்டம், 2 லிட்டர் கள்ளசாராயம் பறிமுதல்!!தொடர்ந்து காரில் இருந்தவர்களை மதுவிலக்கு போலீசார் காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தினர். போலீசார் விசாரணையில் அவர்கள் டி.கே.டி மில் பகுதியைச் சேர்ந்த சுப்பிரமணி(40), பிரேம்குமார்(37) சக்தி(32) என்பதும், அவர்கள் நண்பரின் இல்ல விசேஷத்திற்காக வெள்ளகோவில் சென்ற போது அங்கு 5 லிட்டர் கள்ள சாராயம் கொடுத்ததும், மூன்று லிட்டர் சாராயத்தை 5 பேரும் சேர்ந்து குடித்துவிட்டு மீதமுள்ள 2 லிட்டர் கள்ள சாராயத்தை காரில் எடுத்துச் சென்றதும் தெரியவந்தது.

தொடர்ந்து மாநகர மதுவிலக்கு போலீசார் வழக்கு பதிவு செய்து மூன்று பேரையும் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்த 2 லிட்டர் கள்ளச்சாராயம், கார் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர. இந்த வழக்கில் தப்பியோடிய கிருஷ்ணகுமார், தியானேஸ்வரன் ஆகியோரை வெள்ளக்கோவில் போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

MUST READ