Homeசெய்திகள்க்ரைம்லஞ்சம் வாங்கிய 3 போக்குவரத்து போலீசார் சஸ்பென்ட்

லஞ்சம் வாங்கிய 3 போக்குவரத்து போலீசார் சஸ்பென்ட்

-

சென்னை போக்குவரத்து கூடுதல் ஆணையர் சுதாகர் போக்குவரத்து போலீசாருக்கு வாக்கி டாக்கி மூலம் எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளார். வாகன சோதனையில் ஒழுக்கம் குறித்து உயரதிகாரிகள் காவலர்களிடம் கூற வேண்டும், இல்லையென்றால் அவர்கள் துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை.

லஞ்சம் வாங்கிய 3 போக்குவரத்து போலீசார் சஸ்பென்ட்வேப்பேரியில் போக்குவரத்து போலீசார் லஞ்சம் வாங்குவது போன்ற வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியானது. இதனை தொடர்ந்து சம்பந்தப்பட்ட காவலர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்ட நிலையில், வாக்கி டாக்கி மூலம் போக்குவரத்து கூடுதல் ஆணையர் சுதாகர் எச்சரிக்கை  விடுத்துள்ளார்.

லஞ்சம் வாங்கிய 3 போக்குவரத்து போலீசார் சஸ்பென்ட்வாகன சோதனையின் போது, வாகன ஓட்டிகளிடம் லஞ்சம் வாங்கி சிக்கினால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் இது போன்ற நடவடிக்கையில் ஈடுபட்டால் டிராபிக்கை விட்டு வேறு பிரிவுக்கு செல்லுங்கள் என சாடினார்.

லஞ்சம் வாங்கிய 3 போக்குவரத்து போலீசார் சஸ்பென்ட்போக்குவரத்து காவல் துறையில் புதிய முயற்சிகளை மேற்கொண்டு வரும் நிலையில், உங்களைப் போன்ற நபர்களால் ஒட்டுமொத்த போக்குவரத்து காவல்துறையும் கெட்ட பெயர் எனவும் ஒரு படி மேலே ஏறினால், நான்கு படி கீழே இறக்கி விட்டு விடுகிறீர்கள், இதனால் ரொம்ப அசிங்கமாக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

உதவி ஆணையர் மற்றும் துணை ஆணையர்கள் வாகன சோதனையில் போலீசார் எவ்வாறு செயல்பட வேண்டும் என காவலர்களுக்கு அறிவுரை கூற வேண்டும் எனவும் இல்லை என்றால் அவர்கள் மீதும் துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரித்துள்ளார்.

MUST READ