Homeசெய்திகள்க்ரைம்பறிமுதல் செய்யப்பட்ட 38 லிட்டா் மூலப்பொருட்கள் - மூவர் கைது

பறிமுதல் செய்யப்பட்ட 38 லிட்டா் மூலப்பொருட்கள் – மூவர் கைது

-

- Advertisement -

சென்னை அரும்பாக்கத்தில் சூடோஎஃபெடரின் (Pseudoephedrine) என்கிற போதைப்பொருள் தயாரிக்க கூடிய மூலப்பொருட்களை போலீசார் பறிமுதல் செய்ததுடன் மூன்று பேரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.பிறிமுதல் செய்யப்பட்ட 38 லிட்டா் மூலப்பொருட்கள் - மூவர் கைது சென்னை அரும்பாக்கத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு மெத்தப்பெட்டமைன் போதைப்பொருள் விற்பனை வழக்கில் ஐந்துக்கும் மேற்பட்ட நபர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் டெல்லியில் இருந்து சூடோஃபெடரின் என்கிற மூலப்பொருட்களை வாங்கி வந்து விற்பனை செய்து வந்தது விசாரணையில் தெரிய வந்தது.

இதனை அடுத்து அவர்கள் கொடுத்த தகவலின் அடிப்படையில் வியாசர்பாடி பகுதியை சேர்ந்த ரவி மற்றும் கணேஷ் அதேபோன்று திருவள்ளூர் பகுதியை சேர்ந்த மதன் ஆகிய மூன்று பேரை அரும்பாக்கம் போலீசார் கைது செய்துள்ளனர். அவர்களிடம் இருந்து 38 லிட்டர் சூடோஃபெடரின் என்கிற போதைப்பொருள் தயாரிக்கக்கூடிய மூலப் பொருளை பறிமுதல் செய்துள்ளனர்.

சென்னையில் 17 கோடி ரூபாய் மதிப்புள்ள போதைப்பொருள் பறிமுதல்!

MUST READ