Homeசெய்திகள்க்ரைம்மதுரையில் 50 லட்சம் கேட்டு ஒருவர் கடத்தல் 4 பேர் கைது

மதுரையில் 50 லட்சம் கேட்டு ஒருவர் கடத்தல் 4 பேர் கைது

-

- Advertisement -

மதுரையில் 50 லட்சம் கேட்டு ஒருவர் கடத்தல் 4 பேர் கைது.

மதுரை சுப்பரமணியபுரம் பகுதியைச் சேர்ந்தவர் ஷகாதீன்(33) நான்கு சக்கர வாகனங்களை விற்பனை செய்யும் தொழில் செய்து வந்துள்ளார். இவர் சந்தைப்பேட்டை பகுதியைச் சேர்ந்த ஆசிப்(27) என்பவரிடம் 50 ஆயிரம் கடனாக பெற்று உள்ளார்.

இதற்கு 50 லட்சம் திருப்பித் தர வேண்டும் என்று கேட்டு அவருடைய நண்பர்களுடன் இணைந்து ஷகாதீனை கடத்திச் சென்றுள்ளனர்.

அவரிடம் இருந்து ஒரு லட்சம் ரூபாய் பெற்றுக் கொண்டு சாலையில் இறக்கிவிட்டு சென்றுள்ளனர். பின்னர், அவர் தல்லாகுளம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

அவர் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து நான்கு பேரை கைது செய்து மீதி 5 பேரை தேடி வருகின்றனர்.

MUST READ