மேற்கு உ.பி.யின் மீரட் மாவட்டத்தில் உள்ள சவுத்ரி சரண் சிங் பல்கலைக் கழகத்திற்கு எதிரே உள்ள மருத்துவக் காவல் நிலையப் பகுதியில் சீசர் குடும்ப யுனிசெக்ஸ் சலூன் இயங்கி வருகிறது. இந்தக்கடைக்கு பெயர்தான் சலூன். ஆனால் பெண்களை வைத்து மசாஜ் செய்வதுதான் வேலை. வாடிக்கையாளர்கள் இந்த சலூனுக்குள் நுழையும் போது, வரவேற்பறையில் இருக்கும் இரண்டு பெண்கள் அவர்களை அழகான புன்னகையுடன் வரவேற்கிறார்கள். அதன் பிறகு, வாடிக்கையாளர் தனது பெயர், மொபைல் எண் மற்றும் முகவரியை பதிவேட்டில் பதிவிட வேண்டும்.
அதன் பின்னர்தான் விபரீதமே… அடுத்து அதில் வாடிக்கையாளருக்கு மொபைலில் உள்ள இளம்பெண்களின் புகைப்படங்கள் காட்டப்படும். அதில் வாடிக்கையாளர் கைநீட்டும் புகைப்படத்தில் உள்ள இளம்பெண்ணுடன் ஒரு தனி அறைக்கு அனுப்பப்படுவார். வாடிக்கையாளர் தனது ஆடைகளை கழற்றுமாறு கூறப்படுவார். அதன் பிறகு அந்த அறையின் ஒவ்வொரு கணமும் மறைவான கேமராவில் பதிவு செய்யப்படும்.
டெல்லியில் இதற்காகவே பயிற்சி முடிந்து இளம்பெண்கள் வரவழைக்கப்பட்டு உள்ளனர். கேபினில் இருக்கும் கேமரா, வாடிக்கையாளரின் முகம் மட்டும் தெரியும் வகையில், மசாஜ் செய்யும் பெண்ணின் முகம் மட்டும் தெரியாத அளவுக்கு கோணத்தில் அமைக்கப்பட்டிருந்தது.
மீரட்டில் உள்ள தி சீசர்ஸ் ஃபேமிலி யுனிசெக்ஸ் சலோன் என்ற இந்த மசாஜ் பார்லரை சர்தானா பகுதியின் பட்வாடாவில் வசிக்கும் ஆயிஷா கான் என்ற பெண் நடத்தி வந்தார். பார்லருக்குள் சுமார் 6 சிறிய கேபின்கள் கட்டப்பட்டு, அதில் வாடிக்கையாளர்களுக்கு மசாஜ் செய்யப்பட்டது. ஹரியானாவில் உள்ள குருகிராம், டெல்லி, உ.பி.யில் உள்ள நொய்டாவைச் சேர்ந்த பெண்கள் மசாஜ் சேவை செய்ய இங்கு வந்து செல்வது வழக்கம்.
பல்வேறு வகையான மசாஜ் சேவைகள் இங்கு வழங்கப்பட்டன, ஆனால் நோக்கம் ஒன்று மட்டுமே – பிளாக்மெயில் மூலம் பணக்காரர்களிடமிருந்து பணம் பறிப்பது. பார்லரில் 60 நிமிட சேவைக்கான கட்டணம் ரூ. 2000. இதில் 45 நிமிட மசாஜ் மற்றும் 15 நிமிட ஷவர் அடங்கும்.
மசாஜ் செய்த பிறகு எந்த வாடிக்கையாளரை வீடியோ மூலம் பிளாக்மெயில் செய்ய வேண்டும் என உறுதிப்படுத்திக் கொள்வார்கள். அவரை மிரட்டுவதற்கான ஏற்பாடுகள் தொடங்கும். கேபினில் மசாஜ் செய்வதை வீடியோ எடுத்த ஆயிஷா தானே வாடிக்கையாளரை அழைத்து மிரட்டி பணம் கேட்டுள்ளார்.
பாதிக்கப்பட்ட ஒவ்வொருவருக்கும் புதிய எண்ணிலிருந்து வாட்ஸ்-அப்பில் தொடர்பு கொள்வார். ஆயிஷா தனது வாடிக்கையாளர்களை அச்சுறுத்துவதற்காக பல சிம்களை வாங்கியிருந்தார். ஒவ்வொரு வாடிக்கையாளரையும் புதிய எண்ணிலிருந்து அழைப்பாள். தனது அழைப்புகளை யாரும் பதிவு செய்வதைத் தவிர்க்க, ஆயிஷா வாட்ஸ்அப்பில் மட்டுமே அழைப்புகளை மேற்கொள்வது வழக்கம். அவர் வாடிக்கையாளர்களை பணம் கொடுக்குமாறு மிரட்டுவார். அவரது வீடியோ வைரலாக்கப்பட்டு கற்பழிப்பு வழக்கு பதிவு செய்வதாகவும் மிரட்டுவார்.
பார்லரில் மசாஜ் மட்டுமின்றி விபச்சார வியாபாரமும் நடந்து வந்தது. மசாஜ் செய்ய மட்டும் 2000 ரூபாய் வசூலிக்கப்பட்டது. இது தவிர, எந்தவொரு வாடிக்கையாளருக்கும் சிறப்பு சேவை தேவைப்பட்டால், அதற்கு தனி பணம் வசூலிக்கப்பட்டது.
சலூன் என்ற பெயரில் இயங்கும் மசாஜ் பார்லரில் ஆயிஷா நீண்ட நாட்களாக இந்த தொழிலை நடத்தி வந்தார். இதனிடையே வங்கி அதிகாரி ஒருவரை மிரட்டி ரூ.3 லட்சம் பணம் பறித்துள்ளார். பலாத்கார வழக்கில் சிக்க வைப்பதாக மிரட்டி மேலும் ரூ. 5 லட்சம் கேட்டுள்ளார். அதன் பிறகு பாதிக்கப்பட்ட வங்கி அதிகாரி காவல்துறையிடம் இது குறித்து புகார் அளித்துள்ளார். அடுத்து அங்கு ரெய்டு நடத்தி இந்த முழு விபரங்களையும் போலீசார் அம்பலப்படுத்தினர்.
இந்த மசாஜ் நிலையத்தில் போலீசார் சோதனை நடத்தியபோது, இங்கு வெவ்வேறு கேபின்களில் 7 இளைஞர்கள் சிக்கினர். இந்த இளைஞர்கள் அனைவரும் மசாஜ் பெண்களுடன் ஆட்சேபகரமான நிலையில் இருந்தனர். பார்லர் உரிமையாளர் ஆயிஷா கானையும் போலீசார் கைது செய்தனர். தற்போது ஆயிஷாவின் வலையில் இன்னும் எத்தனை பேர் சிக்கியுள்ளனர் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.