விழுப்புரத்தில் காதல் விவகாரத்தில் 12 ஆம் வகுப்பு மாணவன் கடத்தப்பட்ட வழக்கில் 6 பேர் கைது.
விழுப்புரத்தை சேர்ந்த 12 ஆம் வகுப்பு மாணவன் நேற்று முன்தினம் பள்ளிக்கு வெளியில் மாலை கடத்தப்பட்டார். இது தொடர்பாக விழுப்புரம் மேற்கு காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து வந்த நிலையில் கடத்தப்பட்ட மாணவனை நெய்வேலியில் வைத்திருப்பது தெரியவந்தது. இதனை தொடர்ந்து கடலூர் மாவட்டம் தொப்பிலியாகுப்பம் பகுதியை சேர்ந்த விமல்ராக்(27), ராகுல்ராஜ்(29) சுசித்ரன்(25), எட்வெயிட்(28), சென்னை வேளச்சேரியை சேர்ந்த சிவா(18), சதீஷ்குமார்(18) ஆகிய 6 பேரையும் கைது செய்து மாணவரை மீட்டனர்.
பள்ளி மாணவியை காதலித்தால், மற்றொரு காதலன் நண்பர்களுடன் சேர்ந்து மாணவனை கடத்தி மிரட்டல் விடுத்ததும், எஸ்.சி.எஸ்.சி மற்றும் கடத்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் போலிசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.