சென்னையில் வங்கி வாடிக்கையாளர் பணம் 7.5 கோடியை கையாடல் செய்த முன்னாள் தனியார் வங்கி ஊழியர்கள் மேலும் இருவர் கைது.சென்னை தேனாம்பேட்டை சேர்ந்த ராஜேந்திரன் என்பவர் காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார். அவர் கடந்த 2018ம் ஆண்டு முதல் அடையாறு Yes வங்கிக் கிளையில், வங்கி கணக்கு பராமரித்து வந்ததாகவும். அக்கிளையின் மேலாளராக பணிபுரிந்த பாட்ரிக் ஹோப்மன் என்பவர் கடந்த 2021 ம் ஆண்டு நவம்பர் மாதம் தங்களுக்கு அறிமுகம் ஆனதாகவும் தெரிவித்துள்ளார்.
ராஜேந்திரன் மற்றும் அவரது மனைவி வயதானவர்கள் என்பதால், பணத்தை டெபாசிட் செய்தால் அதிகபடியான வட்டி கிடைக்கும் என்று மேலாளர் ஆன பாட்ரிக் ஹோப்மன் கூறியதன் பேரில் ஆசை வார்த்தைகளை நம்பி , அவரது பெயரிலும் அவரது மனைவி பானுமதி ராஜேந்திரன் என்பவரின் பெயரிலும் இரண்டு சேமிப்பு கணக்குகள் துவங்கி சுமார் 7.5 கோடி ரூபாய் டெபாசிட் செய்ததாக தெரிவித்துள்ளார்.
அதன் பின் ராஜேந்திரன் வெளிநாட்டில் இருந்த சமயத்தில் மேலாளர் பாட்ரிக் ஹோப்மன் தங்களுக்கு தெரியாமல் தங்களது பெயரில் வங்கியிலிருந்து செக் புக் பெற்று தாங்கள் டெபாசிட் செய்த அனைத்து தொகையையும் வங்கி மேலாளர் பாட்ரிக் காசோலைகளில் தங்களது கையொப்பத்தை போலியாக கையொப்பமிட்டு திருடியுள்ளதாக தெரிவித்துள்ளார். குறிப்பாக அதை தங்களுக்கு அறிமுகம் இல்லாத பல்வேறு நபர்களின் வங்கி கணக்குகளுக்கு பணப்பரிமாற்றம் செய்ததாக புகாரில் தெரிவித்துள்ளார்.
இந்த புகாரின் அடிப்படையில் மத்திய குற்றப்பிரிவு, வங்கி மோசடி புலனாய்வுப் பிரிவில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
விசாரணையில், மேலாளர் பாட்ரிக் ஹோப்மனை போலிசார் விசாரிக்க முயன்ற போது, அவர் லண்டன் தப்பி சென்றது தெரியவந்துள்ளது. இதையடுத்து லுக் அவுட் நோட்டிஸ் மற்றும் ரெட் கார்னர் நோட்டிஸ் அளிக்கப்பட்டு தீவிரமாக தேடி வந்தனர்.
மேலும் ராபர்ட் என்பவர் புகார் அளித்த ராஜேந்திரன் மற்றும் அவரது மனைவி இருவரையும் ஏமாற்றும் நோக்கில் மேலாளார் பாட்ரிக்கிற்கு உடந்தையாக வங்கி கணக்குளை துவங்கி அதன் மூலம் மூன்று கோடியே 70 லட்சத்து 30 ஆயிரம் ரூபாய் பணப்பரிமாற்றம் செய்ததை போலீசார் கண்டுபிடித்தனர் மோசடிக்கு உடந்தையாக இருந்த சென்னையை சேர்ந்த லாபத்தை கடந்த மே மாதம் 17 ஆம் தேதி போலீசார் கைது செய்தனர்
இதனை அடுத்து பாட்ரிக் ஹாப்மேன் உடன் பணியாற்றிய கார்த்திக் என்பவரிடம் வங்கி இன்னும் பணபரிவர்த்தனை தொடர்பான இலக்கை அடையவில்லை என கூறி, வங்கி கணக்கு துவங்க ஆட்கள் யாராவது ஏற்பாடு செய்யுமாறு பணத்தை டெபாசிட் செய்து கணக்கு காட்டி மோசடி செய்ததாக விசாரணையில் தெரிய வந்துள்ளது. இதையடுத்து பாட்ரிக் ஹோப்மப் கீழ் அதே வங்கியில் வேலை செய்யும் கார்த்திக், செந்தில் என்பவரின் உதவியுடன் ஐந்து நபர்களுக்கு வங்கி கணக்கு துவங்கி, 36 லட்ச ரூபாயை டெபாசிட் செய்து கணக்காளர்களிடமிருந்து சுய கையொப்பமிட்ட காசோலைகளை (Self Cheque) பெற்று கையாடல் செய்து கமிஷன் பெற்றதும் தெரிய வந்துள்ளது. இதனை அடுத்து முன்னாள் Yes Bank ஊழியர்கள் திருப்பத்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த கார்த்திக்(32), சென்னை முகப்பேரை சேர்ந்த செந்தில்குமார்(41) மேலும் இருவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
மோசடி செய்த பணத்தை மீட்கும் நடவடிக்கையில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர் மேலும் இந்த கும்பல் இன்னும் எத்தனை வாடிக்கையாளர்களிடம் இது போன்ற மோசடிகள் ஈடுபட்டுள்ளார்கள் என்பது குறித்தும் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.