78 வயது மூதாட்டியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த வாலிபர்
நாகை அருகே 78 வயது மூதாட்டியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.
நாகப்பட்டினம் செக்கடி தெருவை சேர்ந்த சிங்காரம் என்பவரது மனைவி சீதா (வயது 78). இவர்களுக்கு 3 மகன்கள், 4 மகள்கள் உள்ளனர். இவர்கள் அனைவருக்கும் திருமணம் ஆகி பல்வேறு இடங்களில் உள்ளதால் சீதா மட்டும் செக்கடி தெருவில் உள்ள வீட்டில் தனியாக வசித்து வந்தார்.
இந்தநிலையில் கடந்த 24-ஆம் தேதி நள்ளிரவில் சீதா காப்பாற்றுங்கள், காப்பாற்றுங்கள் கூச்சல் போட்டுள்ளார். இதை கேட்ட அருகில் உள்ளவர்கள் எழுந்து சீதா வீட்டிற்கு சென்றனர். அப்போது சீதா வீட்டிலிருந்து 35 வயதுமதிக்கதக்க வாலிபர் ஒருவர் முகத்தை துணியால் மூடிக்கொண்டு ஓடி உள்ளார். இதையடுத்து வீட்டின் உள்ளே சென்று பார்த்த போது சீதா இறந்து கிடந்தார்.
இது குறித்து நாகை டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுப்ரியா வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுவந்தார். போலீஸ் சூப்பிரண்டு ஹர்சிங் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினார். மேலும் துணைபோலீஸ் சூப்பிரண்டு பாலகிருஷ்ணன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு போலீசார் தீவிரமாகவிசாரணை செய்து வந்தனர். விசாரணையில் அதே தெருவை சேர்ந்த செல்வராஜ் என்பவரது மகன் பெயிண்டரான வெங்கடேசை (37) சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரணை நடத்திய போது திடுக்கிடும் தகவல் வெளியானது.
இதுகுறித்து போலீசார் கூறியதாவது, சம்பவத்தன்று மது போதையில் இருந்த வெங்கடேஷ் வீட்டில் தனியாக படுத்திருந்த மூதாட்டி சீதாவை பாலியல்பலாத்காரம் செய்ய முயன்றுள்ளார். அப்போது தூக்கத்திலிருந்து எழுந்த மூதாட்டி கூச்சலிட்டுள்ளார். இதையடுத்து வெங்கடேஷ், மூதாட்டி சீதாவின் வாயில் துணியை வைத்து அழுத்தி கொலை செய்துவிட்டு, தனக்கு ஒன்றும் தெரியாது போல இருந்து விட்டார். இதைத் தொடர்ந்து வேளாங்கண்ணியில் பதுங்கி இருந்தவெங்கடேசை பிடித்து நடத்திய விசாரணையில் மூதாட்டி சீதாவை கொலை செய்ததை ஒப்புக்கொண்டதையடுத்து அவரை கைது செய்ததாக தனிப்படை போலீசார் தெரிவித்தனர். வெங்கடேசுக்குதிருமணமாகி 6 ஆண்டுகள் ஆகியும் குழந்தை இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. நாகையில் மூதாட்டிபாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.