Homeசெய்திகள்க்ரைம்ரூ.20 லட்சம் வழிப்பறி வழக்கு… உதவி ஆய்வாளர்- ஐடி அதிகாரி மீண்டும் சிறையில் அடைப்பு!

ரூ.20 லட்சம் வழிப்பறி வழக்கு… உதவி ஆய்வாளர்- ஐடி அதிகாரி மீண்டும் சிறையில் அடைப்பு!

-

- Advertisement -

ரூ.20 லட்சம் வழிப்பறி வழக்கு காவல் சிறப்பு உதவி ஆய்வாளர், ஐடி அதிகாரி இருவருக்கும் ஒரு நாள் போலீஸ்காவல் விசாரணை முடிந்து மீண்டும் சிறையில் அடைப்பு.

ரூ.20 லட்சம் வழிப்பறி வழக்கு… உதவி ஆய்வாளர்- ஐடி அதிகாரி மீண்டும் சிறையில் அடைப்பு!சென்னை பூங்கா நகர் அரசு பல் மருத்துவக் கல்லூரி அருகே கடந்த டிசம்பர் 11ஆம் தேதி ராயபுரத்தைச் சேர்ந்த தமீம் அன்சாரி என்பவரிடம் 20 லட்சம் ரூபாய் வழிப்பறி செய்து விட்டு, ஆயிரம் விளக்கு பகுதியில் வைத்து பங்கு பிரித்துக் கொண்ட சம்பவம்.

திருவல்லிக்கேணி சிறப்பு உதவி ஆய்வாளர் ராஜா சிங் ஐடி அதிகாரி தாமோதரன் ஆகிய இருவரை ஆயிரம் விளக்கு போலீசார் ஒரு நாள் காவலில் எடுத்து விசாரித்து விட்டு மீண்டும் எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

திருவல்லிக்கேணியில் முகமது கௌஸ் என்ற தனியார் நிறுவன ஊழியரிடம் டிசம்பர் 15ஆம் தேதி 20 லட்சம் ரூபாய் வழிப்பறி செய்த வழக்கில் இருவரும் புழல் சிறையில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

MUST READ