Homeசெய்திகள்க்ரைம்மனநலம் குன்றிய மாற்றுத் திறனாளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கு

மனநலம் குன்றிய மாற்றுத் திறனாளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கு

-

மனநலம் குன்றிய மாற்றுத் திறனாளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கு

கள்ளக்குறிச்சி மாவட்டத்தைச் சேர்ந்த 21 வயதான இளம் பெண். 50 சதவீதம் மன நலம் குன்றிய மாற்றுத் திறனாளியான இவர் விருதாச்சலத்தில் விடுதியில் தங்கி கல்லூரியில் இளங்கலை மூன்றாம் ஆண்டு  பயின்று வருகிறார் எனவும் இவரது தந்தை புற்றுநோயால் பாதிக்கப்பட்டு மாதம் தோறும் சென்னைக்கு வந்து சிகிச்சை மேற்கொண்டு வருகிறார் என தெரியவந்துள்ளது. இவரது தாயார், தூய்மை பணியாளராக பணிபுரிந்து வரும் நிலையில் அவரது மாத வருமானம் 6,500 ரூபாயை நம்பி தான் இவர்களது குடும்பம் வாழ்ந்து வருவதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், மாற்றுத்திறனாளி மாணவி விடுதியில் இருந்தவர் கடந்த ஜூன் மாதம் 18-ஆம் தேதி காணாமல் போனதாக விருதாச்சலம் காவல் நிலையத்தில் அவரது பெற்றோர் புகார் அளித்துள்ளனர். அதன் பின்னர் ஒரு மாதம் கழித்து ஜூலை 8-ம் தேதி விருதாச்சலம் பேருந்து நிலையத்தில் உறவினர் ஒருவரால் அந்த பெண் கண்டுபிடிக்கப்பட்டு அந்தப் பெண்ணை பேருந்து நிலையத்தில் விட்டு விட்டு தப்பி ஓடிய நபரின் செல்போனை மட்டும் பெண்ணின் உறவினர் கைப்பற்றி  விருதாச்சல காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

விருதாச்சலம் காவல் நிலைய போலீசாரின் விசாரணையில், மனநலம் குன்றிய மாற்றுத் திறனாளி மாணவியை இன்ஸ்டாகிராம் மூலம் தொடர்பு கொண்ட நாகர்கோவிலைச் சேர்ந்த ஆண்டனி ஆகாஷ் என்ற இளைஞர், அறிமுகமாகி மாணவியை பல்வேறு ஊர்களுக்கு அழைத்துச் சென்று பாலியல் ரீதியாக வன்கொடுமை செய்துவிட்டு ஒரு மாத காலத்திற்குப் பின்னர் விருதாச்சலத்தில் பேருந்து நிலையத்தில் விட்டு விட்டு தப்பிச் சென்றது தெரியவந்துள்ளது.

இந்த சம்பவம் தெரியவந்து சுமார் ஐந்து மாதங்கள் ஆகியும் பாதிக்கப்பட்ட பெண்ணின் தரப்பில் இருந்து விருதாச்சலம் காவல் நிலைய ஆய்வாளர் முருகேசன் உள்ளிட்ட காவல்துறையினரை நேரில் சந்தித்த பிறகும் கூட அது தொடர்பாக அவர்கள், மாணவி காணாமல் போனதாக பதிவு செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கையில் எந்தவித மாற்றமும் செய்யாமல் கிடப்பில் போட்டிருந்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

மாறாக நாகர்கோயிலுக்கு சென்று அந்த இளைஞரை விசாரிக்கிறோம் என்ற பெயரில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினரிடம் பத்தாயிரம் ரூபாய் வாங்கி விருதாச்சலம் போலீசார் செலவழித்ததாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இந்த நிலையில் மாநில எஸ்சி எஸ்டி ஆணையம் மற்றும் மகளிர் ஆணையம் இந்த விவகாரத்தை கையில் எடுத்த பின்னர், கடந்த வாரம் 14-ஆம் தேதி, அதாவது குற்றம் நிகழ்ந்து ஐந்து மாதத்திற்கு பிறகு பாலியல் வன்கொடுமை, நம்பிக்கை மோசடி ஆகிய பிரிவுகளின் வழக்கு பதிவு செய்து ஆண்டனி ஆகாஷ் என்ற நாகர்கோவிலைச் சேர்ந்த இளைஞரை கைது செய்துள்ளனர்.

இந்த விவகாரம் தொடர்பாக இன்று பாதிக்கப்பட்ட கல்லூரி மாணவி மற்றும் அவரது குடும்பத்தினரை நேரில் அழைத்து தமிழ்நாடு எஸ்சி எஸ்டி ஆணைய அதிகாரிகள் விசாரித்துள்ளனர.

விசாரணைக்கு ஆஜரான பின்னர் செய்தியாளர்களை சந்தித்த பாதிக்கப்பட்ட மாணவியின் தரப்பு வழக்கறிஞர் மருது, இந்த வழக்கில் பாதிக்கப்பட்ட மாணவி தலித் சமூகத்தைச் சேர்ந்தவர் என்றும்  ஏன் எஸ்சி எஸ்டி வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் வழக்கு பதிவு செய்யவில்லை என கேள்வி எழுப்பிய நிலையில் அடுத்த மாதம் 11-ம் தேதிக்குள் விருதாச்சலம் காவல் நிலைய ஆய்வாளர் முருகேசன் ஆணையத்தில் நேரில் ஆஜராகி அறிக்கை அளிக்க வேண்டும் என உத்தரவிட்டதாக தெரிவித்துள்ளார்.

அதிமுக ஆலோசனை கூட்டத்தில் பட்டாசு வெடி; கண்ணில் பட்டு பார்வையிழந்த உதவி ஆய்வாளர்

மேலும், பாதிக்கப்பட்ட பெண் 50% மனநலம் குறைபாடு உடைய மாற்றுத் திறனாளி என்பதற்கு சான்று உள்ளதாகவும், மருத்துவரின் அறிக்கை படி அவர் தன்னிச்சையாக எவ்வித முடிவையும் எடுக்கத் தெரியாதவர் எனவும் அவரை அழைத்துச் சென்று ஒரு மாத காலம் பாலியல் வன்கொடுமை செய்திருப்பதால் முதல் தகவல் அறிக்கையில் மாற்றுத்திறனாளிகள் பாதுகாப்புச் சட்டம் மற்றும் கடத்தல் ஆகிய சட்டப்பிரிவுகளையும் சேர்க்க வேண்டும் என பாதிக்கப்பட்ட மாற்றுத் திறனாளி மாணவியின் வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.

அதேபோன்று பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக குற்றம் சாட்டப்பட்ட நிலையில் 5 மாத காலமாக பாதிக்கப்பட்ட மாணவியை அழைத்துச் சென்று உளவியல் நிபுணர்கள், பெண் மருத்துவர் மூலம் அதற்கான தடயங்களை சேகரிக்காமல் கிடப்பில் போட்டு வழக்கிற்கான தடயங்களையும் அழித்துள்ளதாக கருதி ஆய்வாளரையும் இந்த வழக்கில் குற்றவாளியாக சேர்க்க வேண்டும் எனவும் ஆணையத்திடம் முறையிட்டுள்ளனர்.

MUST READ