Homeசெய்திகள்க்ரைம்சித்திரை மாதம் பிறந்த குழந்தை குடும்பத்திற்கு ஆகாது - மூட நம்பிக்கையினால் நடந்த விபரீதம்

சித்திரை மாதம் பிறந்த குழந்தை குடும்பத்திற்கு ஆகாது – மூட நம்பிக்கையினால் நடந்த விபரீதம்

-

சித்திரை மாதத்தில் பிறந்த குழந்தையினால் குடும்பத்தில் உள்ளவர்களின் உயிருக்கு ஆபத்து மற்றும் கடன் பிரச்சனை ஏற்படும் என்கிற மூட நம்பிக்கையினால் தாத்தாவே பேரக்குழந்தையை தண்ணீர் பேரலில் மூழ்கடித்து கொன்றுவிட்டு ஒன்றும் தெரியாதவர் போல் நாடகமாடிய சம்பவம் ஜெயங்கொண்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

சித்திரை மாதம் பிறந்த குழந்தை குடும்பத்திற்கு ஆகாது - மூட நம்பிக்கையினால் நடந்த விபரீதம்சித்திரை மாதத்தில் குழந்தை பிறந்தால் குடும்பத்திற்கு ஆகாது.பிறந்து 38 நாளேயான பேரனை தண்ணீர் பேரலில் மூழ்கடித்து கொலை செய்த தாத்தா கைது செய்யப்பட்டார்.

அரியலூர் மாவட்டம் உட்கோட்டை வெள்ளாளர் தெருவை சேர்ந்தவர் வீரமுத்து, ரேவதி தம்பதியரின் மகள் சங்கீதா.கும்பகோணம் அருகே உள்ள சுந்தர பெருமாள் கோயில் வடக்கு வீதியை சேர்ந்த பாலமுருகன் என்பவருக்கும் சங்கீதா என்ற பெண்ணிற்கும் ஒரு வருடத்திற்கு முன்பு திருமணம் நடந்துள்ளது.

சித்திரை மாதம் பிறந்த குழந்தை குடும்பத்திற்கு ஆகாது - மூட நம்பிக்கையினால் நடந்த விபரீதம்இந்த தம்பதிகளுக்கு கடந்த 38 நாட்களுக்கு முன்னர் ஆண் குழந்தை பிறந்தது. பிறந்த குழந்தையுடன் சங்கீதா, உட்கோட்டையில் தனது பெற்றோர்களுடன் இருந்துள்ளார். கடந்த 14ம் தேதி அதிகாலையில் தனது குழந்தைக்கு பால் கொடுத்து தூங்க வைத்துவிட்டு, சங்கீதாவும் தூங்கிவிட்டார். காலை எழுந்து பார்த்தபோது, தனது அருகில் படுத்திருந்த குழந்தை காணாததை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். தேடி பார்த்தில் வீட்டுக்கு பின்புறம் இருந்த  தண்ணீர் பேரலில் போர்வையுடன் குழந்தை இறந்த கிடந்ததை கண்டறியப்பட்டுள்ளது.

அதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த தாய் சங்கீதா கதறி அழுதுள்ளார். ஜெயங்கொண்டம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் சிசுவின் உடலை மீட்டு ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். பின்னர் குழந்தையின் இறப்பு குறித்து விசாரணை நடத்தினர்.

குழந்தையின் தாத்தா வீரமுத்து, பாட்டி ரேவதி ஆகியோரிடம் போலீசார் விசாரணை செய்ததில் சந்தேகம் எழுந்த நிலையில், தாத்தா வீரமுத்துவை தனி இடத்தில் வைத்து போலீசார் விசாரணை நடத்தினர். இதில் தனது பேரனை தானே கொன்றதாக வீரமுத்து ஒத்துக் கொண்டுள்ளார்.

சித்திரை மாதம் (6.5.24)  தேதியில் குழந்தை பிறந்ததால், குழந்தை பிறந்த நாள், நட்சத்திரப்படி தனது குடும்பத்திற்கும் தனது சம்மந்தி குடும்பத்திற்கும் ஆபத்து என்று உறவினர்கள் கூறியதாலும் மகள் சங்கீதாவின் திருமணத்திற்கு ஏற்கனவே நிறைய கடன் வாங்கியதாலும் மேலும் இந்த குழந்தை பிறந்ததால் இதற்கு சீர் வரிசை செய்ய  கடன் வாங்க வேண்டிய சூழல் உள்ளதாலும் தாத்தா வீரமுத்து விரக்தியில் இருந்துள்ளார்.

மேலும் தனக்கு மூன்று பெண் பிள்ளைகள் மட்டுமே உள்ளதால் ஆண் மகன்  இருந்தால் சித்திரை மாதம் பிறந்த குழந்தையால் அவனது உயிருக்கு ஆபத்து என்றும் ஆண் மகன் இல்லாததால் தாத்தாவாகிய தன்னுடைய உயிருக்கு ஆபத்து என்றும் அனைவரும் கூறியதால் முதலில் குழந்தையை தூக்கிக் கொண்டு எங்கேயாவது விட்டு விட்டு வந்துவிடலாம் என்று எண்ணினேன். சித்திரை மாதம் ஆபத்து பயத்தாலும் தன்னுடைய உயிர் பயத்தாலும் கோபத்தில் உணர்ச்சிவசப்பட்டு அதிகாலை குழந்தையை தூக்கி தண்ணீர் நிரம்பிய பேரலில் போர்வையுடன் போட்டு மூடியை கொண்டு மூடி விட்டேன்.

அதன் பின்னர் வீட்டிற்கு வந்து அதிகாலையில் எல்லோரையும் எழுப்பி குழந்தை எங்கே என்று தானும் அவர்களுடன் சேர்ந்து தேடினேன். கடைசியில் பேரலில் இருந்து குழந்தையை கண்டுபிடித்து சந்தேகம் வரக்கூடாது என்பதற்காக ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சேர்த்ததாக கூறியுள்ளார்.

சித்திரை மாதம் பிறந்த குழந்தை குடும்பத்திற்கு ஆகாது - மூட நம்பிக்கையினால் நடந்த விபரீதம்ஜெயங்கொண்டம் காவல் ஆய்வாளர் ராமராஜன், குழந்தையை கொன்ற தாத்தா வீரமுத்துவை கைது செய்தார். மேலும் உட்கோட்டை வீட்டில் வைத்து வீரமுத்து குழந்தையை எப்படி கொன்றார் என்பதை சாட்சிகள் முன்னிலையில் நடித்துக் காட்டி, போலீசார் வீடியோ பதிவு செய்துள்ளனர்.

சித்திரை மாதத்தில் பிறந்த குழந்தை குடும்பத்திற்கு ஆகாது என்ற மூட நம்பிக்கையில் காரணமாக தாத்தாவே பேரனை தண்ணீர் பேரலில் மூழ்கி கொன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

MUST READ