சென்னையில் அரசு பஸ்ஸில் டிக்கெட் எடுப்பது தொடர்பாக ஏற்பட்ட தகராறில் பயணி தாக்கியதில் 52 வயது நடந்துனர் ஜெகன் உயிரிழந்துள்ளார்.
நேற்று இரவு MKB நகர்-CMBT செல்லும் 46G பஸ்ஸில் நடத்துனர் பணியில் ஈடுபட்டபோது, இச்சம்பவம் நடந்துள்ளது.
வேலூர் மாவட்டம் மாதனூரை சேர்ந்த கோவிந்தன் என்பவர் சென்னை அமைந்த கரையில் இருந்து கோயம்பேடு செல்வதற்காக பேருந்து முன்பக்க வழியாக ஏறிய போது பின்னால் வந்து டிக்கெட் எடுக்குமாறு நடத்துனர் ஜெகன் கூறியதாக கூறப்படுகிறது.
இதில் ஏற்பட்ட வாய் தவறாற்றில், தான் கையில் வைத்திருந்த டிக்கெட் மிஷினால் பயணியின் தலையை நடத்துனர் தாக்கியதாகவும், பதிலுக்கு அவரின் மூக்கில் பயணி குத்து விட்டதாகவும் கூறப்படுகிறது.
இருவரும் ரத்தத்தோடு பேருந்திலேயே மயங்கி சரிந்ததால் ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டதில் நடத்துனர் உயிரிழந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர். பஸ்ஸில் ஏறிய நபர் மதுபோதையில் இருந்ததாக கூறப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து மூன்று பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து பயணியை போலீசார் கைது செய்துள்ளனர்.
விக்டோரியா பள்ளியில் வாயு கசிந்த விவகாரம் – 35 மாணவிகள் அரசு மருந்துவமனையில் அனுமதி!