சென்னை திருவல்லிக்கேணி பகுதியில் இரண்டு நபர்கள் இருசக்கர வாகனத்தில் உள்ள ஒலிபெருக்கி பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் சென்றனர். இதனை விடியோ எடுத்த சமூக ஆர்வலர் ஒருவர் X தளத்தில் பதிவு செய்தார்.
சென்னை திருவல்லிக்கேணி பகுதியில் 1) தலைக்கவசம் இன்றி 2) மற்ற வாகன ஒட்டிகளை அச்சுறுத்தும் வகையில் ஓலி எழுப்பிய படி ஆபத்தான முறையில் இருவர் பயணம் செய்தனர்.
@ChennaiTraffic @roadraja என சமூக ஆர்வலர்கள் ஒருவர் தனது x தள பக்கத்தில் பதிவு செய்திருந்தார்.
அதற்கு பதில் அளித்திருந்த சென்னை போக்குவரத்து காவல்துறை தங்களது x பக்கத்தில்:
எங்களுக்கு தெரியப்படுத்தியமைக்கு நன்றி. தாங்கள் தெரிவித்த தகவல் தொடர் நடவடிக்கைக்காக சம்பந்தப்பட்ட அதிகாரிக்கு அனுப்பப்பட்டுள்ளது. என தெரிவித்து இருந்தனர்.
மேலும் இதனை அடுத்து தற்போது தகுந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும் ₹2500 அபராதம் விதிக்கப்பட்டு எச்சரித்து அனுப்பி வைக்கப்பட்டதாகவும் போக்குவரத்து காவல்துறை சார்பில் தெரிவித்துள்ளனர்.