Homeசெய்திகள்க்ரைம்சுற்றுலா வந்த ஜெர்மன் பயணியிடம் நள்ளிரவில் கொள்ளை

சுற்றுலா வந்த ஜெர்மன் பயணியிடம் நள்ளிரவில் கொள்ளை

-

சுற்றுலா வந்த ஜெர்மன் பயணியிடம் நள்ளிரவில் கொள்ளை

சென்னைக்கு சுற்றுலா வந்த ஜெர்மன் நாட்டு இளைஞரிடம் கத்தி முனையில் அவரது லேப்டாப் மற்றும் லக்கேஜ் பேக்கை கொள்ளை அடித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

சுற்றுலா வந்த ஜெர்மன் பயணியிடம் நள்ளிரவில் கொள்ளை
வழிப்பறிப்பு

ஜெர்மன் நாட்டை சேர்ந்த ஃரைட்ரிச் வின்சென்ட் (வயது 23) என்ற வாலிபர் தமிழ்நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். இதற்காக கடந்த இருபத்தினான்காம் தேதி இலங்கை வழியாக விமானம் மூலம் சென்னை வந்துள்ளார்.

பின்னர் கால் டாக்ஸி மூலம் சென்னை வளசரவாக்கம் ஸ்ரீதேவிகுப்பத்தில் உள்ள விடுதிக்கு செல்லும் போது விடுதியின் அருகில் உணவு அருந்துவதற்காக இறங்கியுள்ளார்.

சுற்றுலா வந்த ஜெர்மன் பயணியிடம் நள்ளிரவில் கொள்ளை
சுற்றுலா வந்த ஜெர்மன் பயணியிடம் நள்ளிரவில் கொள்ளை

இரவு ஒரு மணிக்கு ரோட்டில் நடந்து சென்ற போது அதன் வழியாக வந்த இரண்டு சக்கர வாகனத்தில் தலைக்கவசம் அணிந்து வந்த இரு  நபர் கையில் வைத்திருந்த கத்தியை காட்டி ஜெர்மன் வாலிபரிடம் லக்கேஜ்பேக் மற்றும் லேப்டாப்பை கொள்ளையடித்து சென்றுள்ளனர்.

“ஆவின் நிறுவனத்துடன் நாங்கள் போட்டியிடவில்லை”- அமுல் நிறுவன தமிழக ஒப்பந்ததாரர் விளக்கம்!

பின்னர் ரோட்டில் செல்பவர்களிடம் உதவிக்கேட்டு பாதிக்கப்பட்ட நபர் கோயம்பேடு போலீஸ் நிலையத்திற்கு சென்று புகார் அளித்துள்ளார். ஆனால் அங்கு புகாரை வாங்க மறுத்த காவல்துறையினர் வளசரவாக்கம் காவல் நிலையத்திற்கு அனுப்பி வைத்துள்ளனர்.

சுற்றுலா வந்த ஜெர்மன் பயணியிடம் நள்ளிரவில் கொள்ளை
போலீஸ் விசாரணை

அங்கு ஃரைட்ரிச் வின்சென்டை விசாரணை செய்து பின்னர் அவர் தங்கி இருந்த விடுதியில் தங்க வைத்தனர். வெளிநாட்டில் இருந்து சுற்றுலாவுக்கு வந்த வாலிபரிடம் கொள்ளையடித்து தப்பிச் சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.

MUST READ