Homeசெய்திகள்க்ரைம்3 ஆண்டுகளாக செயின் பறிப்பில் ஈடுபட்டு வந்த பட்டதாரி வாலிபர் கைது

3 ஆண்டுகளாக செயின் பறிப்பில் ஈடுபட்டு வந்த பட்டதாரி வாலிபர் கைது

-

போலீசாரிடம் சிக்காமல் இருப்பதற்காக யூடியூபில் பார்த்து 3  ஆண்டுகளாக செயின் பறிப்பில் ஈடுபட்டு வந்த பட்டதாரி வாலிபர் கைது.3 ஆண்டுகளாக செயின் பறிப்பில் ஈடுபட்டு வந்த பட்டதாரி வாலிபர் கைது

கடந்த மாதம் மாங்காட்டில் மோட்டார் சைக்கிளில் கணவருன் மனைவி சென்று கொண்டிருந்த போது மக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியில் மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர் பெண்ணின் கழுத்தில் அணிந்திருந்த எட்டு பவுன் தாலி செயினை பறித்து கொண்டு சென்றார்.

இது குறித்து அளித்த புகாரின் பேரில் மாங்காடு போலீசார் தீவிரமாக கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்து செயின் பறிப்பில் ஈடுபட்ட நபரை தேடி வந்த நிலையில் செயின் பறிப்பில் ஈடுபட்டது ஆவடி அடுத்த பட்டாபிராம் கரிமேடு பகுதியைச் சேர்ந்த குணசேகரன்(33), என்பது தெரிய வந்தது .அவரை கைது செய்து விசாரித்த போது பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. இதில் பட்டதாரி வாலிபரான குணசேகரன் காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில் ஒரு குழந்தை உள்ளது.

வானகரத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்த இவர் கடனை வாங்கி வீட்டை கட்டி உள்ளார். வீடு கட்டுவதற்காக வாங்கிய கடனை அடைப்பதற்கு செயின் பறிப்பில் ஈடுபட முயற்சி செய்துள்ளார் இதில் போலீசாரிடம் சிக்காமல் இருப்பதற்காக யூடியூபில் பார்த்து செயின் பறிப்பில் எப்படி எல்லாம் ஈடுபடலாம் என பார்த்துவிட்டு கடந்த 2021 ஆம் ஆண்டு முதல் தொடர்ந்து செயின் பறிப்பில் ஈடுபட்டு வந்ததும்.  இவர் ஆவடி, திருவேற்காடு, மாங்காடு உள்ளிட்ட பகுதிகளில் பத்துக்கும் மேற்பட்ட இடங்களில் தொடர்ந்து மூன்று ஆண்டுகளாக செயின் பறிப்பில் ஈடுபட்டு வந்துள்ளார் .

வேலையை முடித்துவிட்டு வீட்டிற்கு செல்லும் நேரத்தில் செயின் பறிப்பில் ஈடுபடுவதும் போலீசாரிடம் சிக்காமல் இருப்பதற்காக நம்பர் பிளேட்டை மறைத்து வாகனத்தை ஓட்டியதும் , பறித்த செயின்களை விற்று கடனை அடைத்து இருப்பதும் தெரிய வந்தது .போலீசார் தன்னை பிடிக்க வரும்போது எந்த வித பதட்டமும் இல்லாமல் போலீசாரிடம் தான் செய்தது தவறுதான் என்றாவது ஒருநாள் போலீசாரிடம் சிக்கிக் கொள்வேன் என தெரிந்து இந்த சம்பவத்தில் ஈடுபட்டதாக வாக்குமூலம் அளித்திருப்பதாகவும் போலீசார் தெரிவித்தனர்.

மிகவும் வசதியான குடும்பத்தில் பிறந்து நன்றாக படித்து வேலையில் இருந்த குணசேகரன் செயின் பறிப்பில் ஈடுபட்டு சிக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஆவடி மற்றும் திருவேற்காட்டில் இந்த நபரை கண்டுபிடிக்க முடியாததால் தொடர்ந்து செயின் பதிப்பு சம்பவங்களில் ஈடுபட்டு வந்ததும் அந்த வழக்குகளை கிடப்பில் போட்டதாகவும் மாங்காடு போலீசார் சுமார் 350-க்கும் மேற்பட்ட கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்து குணசேகரனை கைது செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.

மூதாட்டியை கட்டிப்போட்டு நகை திருட்டு – மர்ம நபா்களுக்கு போலீசாா் வலைவீச்சு

MUST READ