Homeசெய்திகள்க்ரைம்ஆவடியில்கள்ளக்காதலியை பெட்ரோல் ஊற்றி தீ

ஆவடியில்கள்ளக்காதலியை பெட்ரோல் ஊற்றி தீ

-

- Advertisement -

ஆவடியில் கள்ளக்காதலியை பெட்ரோல் ஊற்றி தீ வைத்த காதலனை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

ஆவடி அடுத்த கொள்ளுமேடு பகுதியில் வசித்து வந்தவர் சுதா வ/40. இவருக்கு கடந்த 2001ம் ஆண்டு திருமணமாகி 10 ஆண்டுகளுக்கு மேல் குழந்தை இல்லாததால் முதல் திருமணம் விவாகரத்தாகியுள்ளது.

இதன் பின்னர் சுரேஷ் என்பவரை திருமணம் செய்துகொண்டு வாழ்ந்து வந்ததில் இரு குழந்தைகள் பிறந்துள்ளன. இதனை தொடர்ந்து அவரும் சுதாவை விட்டு பிரிந்து சென்றதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் சுதா தனியார் கல்லூரியில் வேலை பார்த்து வந்துள்ளார்.

ஆவடியில் கள்ளக்காதலியை பெட்ரோல் ஊற்றி தீ

அப்பொழுது அதே கல்லூரியில் வேலை செய்யும் ஓட்டேரியை சேர்ந்த சௌந்தரராஜனுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. சௌந்தரராஜனுக்கும் திருமணமாகி இரு குழந்தைகள் உள்ளது. இந்நிலையில் இவர்கள் இருவரும் ஆவடி அடுத்த அண்ணனுரில் தனியாக வீடு எடுத்து கடந்த ஒரு வருடத்திற்கு மேல் தங்கி குடும்பம் நடத்தியுள்ளனர்.

இதனிடையே சௌந்தரராஜனுக்கும் சுதாவிற்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. அதனால் சுதா தனது 3வது கணவரையும் பிரிந்து தாய் வீட்டிற்கு சென்று தங்கியிருந்துள்ளார். மேலும் சௌந்தரராஜனுடனான செல்போன் தொடர்பை துண்டித்துள்ளார்.

இதனால் கள்ளக்காதலி சுதாவை சமாதானம் செய்து தன்னுடன் அழைத்து செல்ல சௌந்தரராஜன் ஆட்டோவில் கொள்ளுமேடு சென்றுள்ளார். அப்போது சுதா தனது குழந்தையை அழைத்து கொண்டு அருகிலிருந்த மளிகை கடைக்கு வந்துள்ளார். அப்பொழுது சௌந்தரராஜன் ஆட்டோவில் சுதாவை பின்தொடர்ந்து வந்து தன்னுடன் வரும்படி கட்டயப்படுத்தியுள்ளார்.

ஆவடியில் கள்ளக்காதலியை பெட்ரோல் ஊற்றி தீ

இதற்கு சுதா தொடர்ந்து மறுப்பு தெரிவித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த சௌந்தரராஜன் ஆட்டோவில் மறைத்து வைத்திருந்த பெட்ரோலை சுதாவின் மீது ஊற்றி தீ வைத்து விட்டு அங்கிருந்து தப்பி சென்றுள்ளார். சுதாவின் அலறல் சத்தம் கேட்டு அருகிலிருந்தவர்கள் உடனடியாக காவல் நிலையத்திற்கும் 108 ஆம்புலன்சுக்கும் தகவல் தெரிவித்துள்ளனர்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ஆவடி டேங்க் பேக்டரி போலீசார் 50% தீ காயங்களுடன் இருந்த சுதாவை மீட்டு ஆம்புலன்ஸ் வாகனத்தில் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ஆவடியில் கள்ளக்காதலியை பெட்ரோல் ஊற்றி தீ

மேலும் தலைமறைவாக உள்ள ஆட்டோ டிரைவர் சௌந்தரராஜனை பிடிக்க 2 தனிபடைகள் அமைக்கப்பட்டு தீவிரமாக தேடி வருகின்றனர். காதலன் அழைத்து வர மறுத்ததால் கள்ளக்காதலியை பெட்ரோல் ஊற்றி தீ வைத்து சம்பவம் அப்பகுதில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

MUST READ