Homeசெய்திகள்க்ரைம்ரயில் டிக்கெட் பரிசோதகர் என மோசடியில் ஈடுபட்டவர் கைது

ரயில் டிக்கெட் பரிசோதகர் என மோசடியில் ஈடுபட்டவர் கைது

-

ரயில் டிக்கெட் பரிசோதகர் என மோசடியில் ஈடுபட்டவர் கைது

சென்னை சென்ட்ரலில் ரயில் டிக்கெட் பரிசோதகர் எனக்கூறி மோசடியில் ஈடுபட்ட நபரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

பீகார் மாநிலத்தை சேர்ந்த வர் சதர் அலாம் (25). இவர் நேற்றுமுன்தினம் காலை பீகார் செல்வதற்காக சென்டிரல் ரெயில் நிலையத்திற்கு சென்றுள்ளார். அப்போது, கொச்சுவேலி எக்ஸ்பி ரஸ் ரெயிலில் முன்பதிவு செய்துள்ளார். ஆனால் அவருக்கு டிக்கெட் கிடைக்கவில்லை என்பதனை அறிந்து  செய்வதறியாமல் நின்று கொண்டிருந்திருக்கிறார்.

அப்போது அங்கு வந்த TTE சீருடை அணிந்த நபர் ஒருவர், ‘நோட் பேடில் சீல்’ வைத்த டிக்கெட் ஒன்றை கொடுத்து இதை எடுத்துச் செல்லுங்கள் என கூறியுள்ளார். மேலும் சீட் ஒதுக்கி கொடுத்து விடு வார்கள் எனவும், உங்கள் செல் போன் எண்ணுக்கு டிக்கெட் உறுதி செய்யப்பட்டது  மற்றும் இது குறித்த குறுஞ்செய்தி வரும் என கூறி  சதர் அலாமிடம் இருந்து ரூ.900 பெற்றுக் கொண்டு சென்றுள்ளார்.

3வது முறையாக மக்களின் நம்பிக்கையை பெற்றுள்ளது மத்திய அரசு – ஜனாதிபதி பாராட்டு!

வெகு நேரம் ஆகியும் தனது செல்போன் எண்ணுக்கு எந்த குறுஞ்செய்தியும் வராததால் சந்தேகம் அடைந்த சதர் அலாம் சம்பந்தப்பட்ட நபரை, ரயில் நிலையம் முழுவதும் தேடியிருக்கிறார், அவர் கிடைக்கவில்லை.

பின்னர் இதுகுறித்து சென்ட்ரல் ரயில்வே போலீசாரிடம் புகார் அளித்துள்ளார். புகரின் அடிப்படையில்  போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்துள்ளனர்.

 

ரயில் நிலையம் அருகே நோட் பேடு, ரப்பர் ஸ்டாம்பு மற்றும் ஸ்டாம்பேடு ஆகியவற்றுடன் மதியம் 1 மணியளவில் நின்றிருந்த ஒருவரை சந்தேகத்தின் பேரில் ரயில்வே போலீசார் பிடித்து விசாரித்த போது சென்னை கொடுங் கையூர் பகுதியை சேர்ந்த ஜிதேந்திர ஷா (38) என்பதும், ரயில் பயணிகளிடம் போலி டிக்கெட் வழங்கி மோசடியில் ஈடுபட்டதும் தெரியவந்தது. அவரை போலீசார் கைது செய்து அவரிடமிருந்து போலி முத்திரைகள், போலி டிக்கெட் ஆகியவற்றை பறிமுதல் செய்துள்ளனர்.

சென்னை சென்ட்ரலில் இருந்து ஹவுரா செல்லும் பயணிக்கு வழங்கிய ஒரு போலி டிக்கெட்டில், என்னைப்பிடிக்க உளவாளி வைத்தால் நடப்பதே வேறு என ரயில்வே போலீசாருக்கு சவால் விடுக்கும் வகையில் அரைகுறை ஆங்கிலத்தில் எழுதியுள்ளார் என்பதை அவர் அளித்த வாக்குமூலத்தின் மூலம் தெரியவந்துள்ளது.

ரயில் டிக்கெட் பரிசோதகர் என மோசடியில் ஈடுபட்டவர் கைது

இவர் இதேபோல் எழும்பூர்,தாம்பரம் உள்ளிட்ட ரயில் நிலையங்களில் நோட் பேட்டில் சீல் வைத்து இதை எடுத்துச் செல்லுங்கள், எந்த டிக்கெட் பரிசோ கர்களும் எதுவும் சொல்லமாட்டார்கள்,  எனக்கூறி வடமாநிலத்தவரை குறிவைத்து போலியாக டிக்கெட்டுகளை விற்று வந்ததும் தெரியவந்துள்ளது.

கடந்த ஆண்டு ஜூன் மாதம் இதே போல மோசடியில் ஈடுபட்டு கைது செய்யப்பட்டவர் இந்த ஜிதேந்தர ஷா. சிறையில் இருந்து வெளி வந்ததும் மீண்டும் தனது மோசடி வேலையை தொடங்கி மீண்டும் கைதாகி இருக்கிறார்.

ராஜஸ்தானை சேர்ந்த இவரது குடும்பம் 20 ஆண்டுகளுக்கு முன்பே சென்னைக்கு குடி பெயர்ந்துள்ளனர். தந்தையின் நகைக்கடையில் தந்தைக்கு உதவியாக இருந்த ஜிதேந்திர ஷா, அவரது இறப்புக்கு பின் முறையாக தொழிலை நடத்த முடியாமல் கடனாளியாகியுள்ளார்.

இந்தி தெரியும் என்பதால் வட மாநில தொழிலாளர்களை குறிவைத்து அவர்களுக்கு டிக்கெட் , இருக்கை கிடைக்க உதவுவது போல் நடித்து நான்கு ஆண்டுகளாக மோசடியில் ஈடுபட்டு வந்துள்ளார் என்பது விசாரனையில் தெரியவந்துள்ளது.

கஷ்டப்படாமல் சம்பாதிக்க வேண்டும் என நினைத்த ஜிதேந்தர் ஷா இந்த மோசடி வழியை தேர்ந்தெடுத்துள்ளார்.

MUST READ