Homeசெய்திகள்க்ரைம்அதிக லாபம் பெற்று தருவதாக ஆசை வார்த்தை கூறி ஒரு கோடிக்கு மேல் மோசடி செய்த...

அதிக லாபம் பெற்று தருவதாக ஆசை வார்த்தை கூறி ஒரு கோடிக்கு மேல் மோசடி செய்த நபர் கைது

-

குறைந்த முதலீடு செய்தால் அதிக லாபம் பெற்றுத்தர என்னால் முடியும்  என அனைவரிடமும் ஆசை வார்த்தை கூறி ஆசையை தூண்டி அதற்கு நீங்கள் சொற்ப லட்சம் பணம் தந்தால் உங்களுக்கு நல்ல முதலீடு பெற்று பல லட்ச ரூபாய் திரும்ப பெற்று தருவேன் என்று ஆசை வார்த்தை கூறியதால் பணிபுரியும் நிறுவனத்தின் கணக்கு உள்ள தனியார் வங்கியில் மாத தவணைக்கு தலா பத்து லட்சத்திற்கு மேல் ஒவ்வொருவரும் தனித்தனியாக லோன் பெற்று தந்துள்ளனர்.சுமார் ஒரு கோடி மேல் ஏமாற்றப்பட்டதின் அடிப்படையில் தாம்பரம் குற்றப்பிரிவு ஆய்வாளரிடம் புகார் அளித்துள்ளனா்.போலீசார் விசாரணையில் பல லட்சம் ஏமாற்றியது தெரியவந்ததின் அடிப்படையில் பண மோசடி பிரிவின்கீழ் நூதன முறையில் மோசடி செய்து ஏமாற்றியது உள்ளிட்ட பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி புழல் சிறையில் அடைத்தனர் .அதிக லாபம் பெற்று தருவதாக ஆசை வார்த்தை கூறி ஒரு கோடிக்கு மேல் மோசடி செய்த நபர் கைது

சென்னை தாம்பரம் அடுத்த ஒரகடம் பகுதியில் இயங்கி வருகிறது பிரபல தனியார் வாகன டயர் தயாரிக்கும் நிறுவனம் இதில் ஏழுமலை உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட நபர்கள் மெஷின் ஆபரேட்டராக பணிபுரிந்து வருகிறார்கள் அதே நிறுவனத்தில் தர்மபுரி மாவட்டம் அரூர் அருகே உள்ள கிராமத்தை சேர்ந்த கணேஷ் குமார் என்ற நபர் கடந்த 2014 ஆம் வருடம் முதல் அதே நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார் அவர் அனைவரிடமும் நெருக்கமாகவும், மிக அன்பாகவும், நேர்மையாகவும் பழகி வந்துள்ளார்.

இவர்கள் அருகே உள்ள தனியார் விடுதியில் அரை எடுத்து  தங்கி வேலை செய்து வருகிறார்கள் அப்பொழுது கணேஷ்குமார் சக ஊழியருடன் அவ்வப்போது தனது மனைவிக்கு  இருதயத்தில் ஓட்டை இருப்பதாகவும் அதனால் உடல்நிலை சரியில்லை என்றும் அதற்கு ஆப்ரேஷன் செய்ய வேண்டும் என்றும் சிறுக சிறுக சக ஊழியரிடம் ஒருவருக்கு ஒருவர் தெரியாமல் பணம் வாங்கி உள்ளார். அது மட்டும் இல்லாமல் நீங்கள் குறைந்த முதலீடு செய்தால் அதிக லாபம் பெற்றுத்தர என்னால் முடியும்  என அனைவரிடமும் ஆசை வார்த்தை கூறி ஆசையை தூண்டி அதற்கு நீங்கள் சொற்ப லட்சம் பணம் தந்தால் உங்களுக்கு நல்ல முதலீடு பெற்று பல லட்ச ரூபாய் திரும்ப பெற்று தருவேன் என்று ஆசை வார்த்தை கூறியும் அதன் அடிப்படையில் நண்பர்கள் அவர்கள் பணிபுரியும் நிறுவனத்தின் கணக்கு உள்ள தனியார் வங்கியில் மாத தவணைக்கு தலா பத்து லட்சத்திற்கு மேல் ஒவ்வொருவரும் தனித்தனியாக லோன் பெற்று தந்துள்ளனர்.

அப்பொழுது லோன் பெற்றுக் கொடுத்த நான்கு ஐந்து மாதங்கள் சரியாக கணேஷ்குமார் மாத தவணை கட்டி வந்துள்ளார் பின்னர் காலதாமதம் ஏற்படுத்தியுள்ளார் அதை குறித்து கணேஷ்குமாரிடம் கேட்டபோது இன்னும் முதலீடு செய்த இடத்தில் சரியாக பண வரவில்லை நானே மற்றவரிடம் கடன் வாங்கி தான் உங்கள் தவணை பணத்தை கட்டி வருகிறேன்.எனவே இன்னும் சிறிது காலத்தில் நல்ல முதலீடு வந்த பிறகு அனைவருக்கும் வட்டி முதலுமாகவும் கொடுத்து விடுகிறேன் என்று கூறி சிறிது காலத்தில் நிறுவனத்திலிருந்து விருப்ப ஓய்வு பெற்று தலைமறைவாகி உள்ளார்.அதிக லாபம் பெற்று தருவதாக ஆசை வார்த்தை கூறி ஒரு கோடிக்கு மேல் மோசடி செய்த நபர் கைது

இதனைக் கண்டு சக ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர் இதில் ஒவ்வொருவரும் குறைந்தபட்சம் 10 லட்சம், அதிகபட்சம் 30 லட்சம் ரூபாயும் கொடுத்து ஏமாற்றப்பட்டுள்ளனர். 20க்கும் மேற்பட்டோர் கொடுத்து சுமார் ஒரு கோடி ஏமாற்றப்பட்டுள்ளது தெரிய வந்தது. இதில் தாம்பரம் பகுதியைச் சேர்ந்த ஏழுமலை என்பவர் ரூபாய் 10 லட்சம் ஏமாற்றப்பட்டதின் அடிப்படையில் அவர் மூலமாக தாம்பரம் குற்றப்பிரிவு ஆய்வாளரிடம் புகார் அளித்துள்ளார் அதன் அடிப்படையில் குற்றப்பிரிவு போலீசார் புகாரை பெற்றுக் கொண்டு ஏமாற்றியதாக கூறப்படும்

கணேஷ் குமாருக்கு தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு அழைத்து உங்கள் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது நீங்கள் உடனடியாக காவல் நிலையம் வந்து புகாருக்கு பதில் தரும்படி கேட்டு  அழைத்துள்ளனர் அதன் அடிப்படையில் காவல் நிலையம் வந்த கணேஷ் குமார் போலீசார் விசாரணையில் பல லட்சம் ஏமாற்றியது தெரியவந்ததின் அடிப்படையில் பண மோசடி பிரிவின்கீழ் நூதன முறையில் மோசடி செய்து ஏமாற்றியது உள்ளிட்ட பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை  செய்தனர் ஏமாற்றிய பணங்களை என்ன செய்தார் என  போலீசார் துருவி கேட்டதில் தனது பெற்றோர்களுக்கு வீடு கட்டிக் கொடுத்தாகவும், அவர்கள் ஊரில் விவசாய நிலங்கள் ஏக்கர் கணக்கில் வாங்கி அதில் போர் போட்டுள்ளார். மேலும் அவர் ட்ரீம் 11 என்கிற ஆன்லைன் கிரிக்கெட் கேம் விளையாடி பல லட்சங்களை அதில் இழந்திருப்பதாகவும் விசாரணையில் தெரிவித்தார்

இதன் அடிப்படையில் அவர் மீது வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி புழல் சிறையில் அடைத்தனர் .இந்த சம்பவமானது ஒரு நபரை எப்படி எல்லாம்  ஆசை தூண்டி, ஆசை வார்த்தை கூறி ஏமாற்றலாம் என கணேஷ்குமார் உதாரணமாகிவுள்ளார்.  அதேபோல் யாரையுமே நம்ப கூடாது என்று மற்றவர்களுக்கு பாடம் கற்பிக்கும் அளவிற்கு இந்த நிகழ்வு நிறைவேறி உள்ளது.

எனவே அதிக லாபம் பெற்று தருவதாகும், மிகவும் பரிதாபமாக குடும்ப சூழ்நிலை சொல்லி பணப்பெறுவதும் வாடிக்கையாக்கி வருகின்ற நபர் பெரிகிவருகிறார்கள்  இதனால் நன்கு அறிந்து உரிய ஆவணங்களோடு உதவி செய்தால் இதுபோல சம்பவத்திலிருந்து பொதுமக்கள் பாதுகாக்கப்படுவார்கள் .அதே போல் ஆசை வார்த்தைகள் அதிக லாபங்கள் ஒருவர் திரும்பத் தருவதாக கூறி ஆசை வார்த்தைகளால் ஏமாற்றம் அடைவார்கள் என இதன் மூலம் தெரிய வருகிறது.

புழல்: வீட்டின் பூட்டை உடைத்து நகை கொள்ளை – மர்ம நபர்களுக்கு போலீசார் வலைவீச்சு

MUST READ