வேலை கேட்டு வந்த பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த தனியார் கல்லூரி பேராசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கோவையில் 25 வயது பெண்ணை தனது வீட்டில் வைத்து பாலியல் பலாத்காரம் செய்த தனியார் கல்லூரி பேராசிரியரை போலீசார் கைது செய்தனர்.
கோவை கல்வீரம்பாளையம் அருகே உள்ள முருகன் நகர் நேரு தெருவில் வசிப்பவர் பி.சிவப்பிரகாசம் (45). திருப்பூரைச் சேர்ந்த 25 வயது இளம்பெண் ஒருவர் வேலை தேடி இவரை தொடர்பு கொண்டுள்ளார். அவரது நண்பர் ஒருவரின் மூலம் சிவப்பிரகாசத்தை அறிந்த அந்த பெண், கோவையில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் ஆய்வக உதவியாளர் வேலையைப் பெறுவதற்கு அவரது உதவியை நாடியதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் சிவப்பிரகாசம் வாட்ஸ்அப் மூலம் அப்பெண்ணை தொடர்பு கொண்டு கல்வித் தகுதி சான்றிதழ்களை எடுத்தக் கொண்டு செவ்வாய்கிழமை அன்று அவரை சந்திக்கும்படி கூறியுள்ளார். வேலை தொடர்பாக இளம்பெண் சிவபிரகாசம் வீட்டிற்கு சென்ற நிலையில், அவர் திடீரென பெண்ணை கட்டி பிடித்து பலாத்காரம் செய்ய முயன்றார். அவரிடமிருந்து தப்பிய பெண் வீட்டிலுள்ள கழிவறைக்குள் சென்று பூட்டிக்கொண்டு அத்துடன் தனது தோழிக்கு லொகேஷன் அனுப்பி உள்ளார். அதை அடுத்து தோழி போலீஸார் உதவியுடன் இளம்பெண்ணை மீட்டதாக போலீசார் தரப்பில் தெரிவித்துள்ளனர்.
பி்ன்னர் போலீஸார் சிவப்பிரகாசம் மீது வழக்கு பதிவு செய்து பிரிவுகள் 64 (1) (கற்பழிப்பு தண்டனை) மற்றும் 62 (கடுமையான குற்றங்களைச் செய்ய முயன்றதற்காக ஆயுள் தண்டனையுடன்) ஆகிய பிரிவுகளின் கீழ் கைது செய்துள்ளனர்.
மாடர்னாக மாறிய மனைவி மீது வெறி: 10 ஆண்டுகளாகியும் கிடைக்காத மர்மம்