மின்வாரியத்தில் வேலை வாங்கி தருவதாக கூறி 83 லட்சம் சுருட்டிய பெண்
சென்னையை அடுத்த பழைய பல்லாவரத்தை சேர்ந்தவர் சந்தோஷ்குமார் (45). இவருடன் தனியார் நிறுவனத்தில் ஒன்றாக பணிபுரிந்த பெண் புனிதா பார்த்திபன் (28), தற்போது குன்றத்தூர் அடுத்த திருமுடிவாக்கத்தில் உள்ள மின்வாரிய அலுவலகத்தில் கிளர்க் ஆக பணி செய்வதாக கூறி தற்போது பணிக்கு தற்காலிகமாக ஆட்களை எடுக்கிறார்கள். 3 ஆண்டுகள் வேலை செய்தால் பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள் என ஆர்வத்தை தூண்டும் விதமாக பேசி, உங்கள் மனைவி மலருக்கு பணம் கொடுத்தால் வேலை வாங்கி தருகிறேன் என்றும் கூறியுள்ளார். இதனை நம்பி சந்தோஷ்குமாரும் 3 லட்சம் கொடுத்துள்ளார்.
அதன் பின்னர் குழுவாக ஆட்கள் எடுப்பதால் மற்றவர்களையும் சேர்ந்துவிடும்படி புனிதா பார்த்திபன் கேட்க அதனை நம்பி சந்தோஷ்குமார் அவருக்கு தெரிந்த குன்றத்தூரை சேர்ந்த சரண்யா எனும் பெண், தன் சகோதரன் கெளதமுக்கு 3 லட்சம் கொடுத்துள்ளார். இதுபோல் வேலை தேடும் நபர்களுக்கு வலைவீசிய புனிதா பார்த்திபன் தனித் தனியே ரொக்கமாகவும், வங்கி பரிமாற்றம் மூலமாகவும் 83 லட்சம் பணம் பெற்றுள்ளார்.
ஆனால் அவர் குறிப்பிட்டது போல் பணி ஆணை பெற்றுதராததால் பணம் கொடுத்தவர்கள் புனிதாவை கேட்டுள்ளனர். அதற்கு செல்போன் மெஜேச் வரும் என காலம் கடத்திய நிலையில் புனிதா ஆடம்பரமாக செலவு செய்வதும், வீட்டிற்கு ஆடம்பர பர்னிச்சர் பொருட்களையும், கணவர் பார்த்திபன் பெயரில் வீடு மனைகள் வாங்கியும், கரவை மாடுகளையும் வாங்கியுள்ளார்.
இதனால் சந்தேகமடைந்து அவர் குறித்து பணி செய்யும் மின்வாரிய அலுவலகத்தில் சக ஊழியர்களிடம் விசாரித்தபோது அவரே தற்காலிகமாக துப்புரவு பணியில் உள்ளதாகவும் அவரின் தந்தை பாபு மட்டும் ஒயர்மேன், இளைய சகோதரன் ஏழுமலை தற்காலிக ஊழியர் தெரிய வந்தது. அதனால் அதிர்ச்சியடைந்த பாதிக்கப்பட்டவர்கள் பணத்தை திருப்பி கேட்டபோது ஒரு சிலருக்கு மட்டும் 20 லட்சம் பணத்தை திருப்பி கொடுத்துள்ளார்.
மீதமுள்ள 63 லட்சம் தரமால் மோசடியில் ஈடுபட்டதாகவும் புனிதா கிளர்க் என அடையாள அட்டை தயாரித்து 40 ஆயிரம் சம்பளம் என கூறி ஏமாற்றியதாக பாதிக்கப்பட்டவர்கள் மிகுந்த வேதனையில் கடந்த ஆறுமாதமாக குடும்பத்தில் பல பிரச்சினைகள் எழுந்துள்ளது என தெரிவித்தனர். மேலும் சோழிங்கநல்லூரில் உள்ள தாம்பரம் காவல் ஆணையாளர் அலுவலகத்தில் பாதிக்கப்பட்டவர்கள் புனிதா பார்த்திபன் மீது புகார் அளித்துள்ளனர்.
இது குறித்து புகாரை பெற்ற காவல் துறையினர் சம்மந்தபட்ட நபர்களிடம் விசாரணை செய்ய முடிவு செய்யப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தனர்.