Homeசெய்திகள்க்ரைம்பொருளாதார குற்றப்பிரிவு  போலீஸ் பிடியில் இயக்குனர் மைக்கேல்ராஜ்

பொருளாதார குற்றப்பிரிவு  போலீஸ் பிடியில் இயக்குனர் மைக்கேல்ராஜ்

-

விசாரணை வளையத்தில் ஆரூத்ரா இயக்குனர் மைக்கேல்ராஜ்

ஆரூத்ரா நிறுவனத்தின் இயக்குனர்களில் ஒருவரான மைக்கேல் ராஜிடம் பொருளாதார குற்றப்பிரிவு  போலீசா தீவிர விசாரானை நடத்தி வருகின்றனர்.

விசாரணை வளையத்தில் ஆரூத்ரா இயக்குனர் மைக்கேல்ராஜ்

ஆருத்ரா தங்க வர்த்தக நிறுவனத்தின் இயக்குனர்களில் ஒருவரான மைக்கேல் ராஜ் கடந்த மாதம் 29ஆம் துபாயில் இருந்து வந்தவரை சென்னை விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டார். மோசடி வழக்கில் அவருக்கு தொடர்பு இருப்பதாக பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.

விசாரணை வளையத்தில் ஆரூத்ரா இயக்குனர் மைக்கேல்ராஜ்

மேலும், வைப்பு தொகை, முதலீடு என முதலீட்டாளர்களிடம்  இருந்து ஆருத்ரா கோல்டு ட்ரேடிங் நிறுவனமானது 2438 கோடி ரூபாய் மோசடி செய்த வழக்கு விசாரணையானது, பொருளாதார குற்றப்பிரிவு போலீசாரால் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், வழக்கில் தொடர்புடைய நிர்வாக இயக்குனர்களில் ஹரீஷ், பாஸ்கர், மோகன்பாபு, செந்தில்குமார், நாகராஜ், மேலாளர்கள் பேச்சிமுத்து, ராஜா, ஐயப்பன், மாலதி, இடைத்தரகர் ரூசோ அதன் நிர்வாகிகள் என இதுவரை 11 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வரும் பொருளாதார குற்றப்பிரிவு காவல் துறையினர், ஆரூத்ரா நிறுவனத்தின் இயக்குனர்களில் ஒருவரான மைக்கேல்ராஜும் விசாரணை வளையத்தில் கொண்டு வரப்பட்டார்.

விசாரணை வளையத்தில் ஆரூத்ரா இயக்குனர் மைக்கேல்ராஜ்

இந்நிலையில், கைது செய்யப்பட்டு சிறையில் இருந்த மைக்கேல்ராஜ், 7  நாள் போலீஸ் காவலில் எடுக்கப்பட்ட அவரிடம், விசாரணையை தீவிர படுத்தி வரும் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார், முதலீட்டாளர்களிடம் இருந்து மோசடி செய்யப்பட்ட கோடிக்கணக்கான பணம் மூலம் வெளி நாட்டில் ஏதேனும் அசையும், அசையா சொத்துக்கள் வாங்கப்பட்டு உள்ளதா என்ற கோணத்தில் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

MUST READ