Homeசெய்திகள்க்ரைம்தலைமறைவாக இருந்த செயின் திருடன் கைது

தலைமறைவாக இருந்த செயின் திருடன் கைது

-

தலைமறைவாக இருந்த செயின் திருடன் கைதுசென்னை புதுவண்ணாரப்பேட்டையில் கூலி தொழிலாளிடம் செயின் பறித்து கொண்டு தலைமறைவாக இருந்த வழிப்பறி கொள்ளையன்

வண்ணாரப்பேட்டையில் சுற்றி திரிந்து கொண்டிருந்த போது தனிப்படை போலீசார் கைது செய்தனர்.

சென்னை புதுவண்ணாரப்பேட்டை பூண்டி தங்கம்மாள் தெருவை சேர்ந்த கூலி தொழிலாளி தங்கமணி (38) இவர் கடந்த ஜீன் மாதம் 29 தேதி தண்டையார்பேட்டை வ.உ.சி நகர் பகுதியில் சைக்கிளில் சென்று கொண்டு இருந்த போது அடையாளம் தெரியாத மர்ம நபர் ஒருவர் கருப்பு தொப்பி அணிந்து கொண்டு மறைந்து இருந்து தங்கமணி கழுத்தில் அணிந்திருந்த 2 சவரன் தங்க நகை பறித்து கொண்டு தப்பி ஒட்டம் பிடித்துள்ளார்.

இச்சம்பவம் குறித்து புதுவண்ணாரப்பேட்டை காவல் நிலையத்தில் தங்கமணி புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

வண்ணாரப்பேட்டை துணை ஆணையர் சக்திவேல் உத்தரவின் பேரில் திருவொற்றியூர் உதவி ஆணையர் இளங்கோவன் மேற்பார்வையில் உதவி ஆய்வாளர் ரமேஷ் தலமையில் தனிப்படை அமைக்கப்பட்டு மெரினா பீச்,வண்ணாரப்பேட்டை, திருவொற்றியூர், எண்ணூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தேடி வந்துள்ளனர்.

பெங்களூரில் பிஜி 3 மாடியில் இருந்த பெண் கொலை – போலிஸ் விசாரணை

இதனையடுத்து இராயபுரம் அரசு ஸ்டான்லி மருத்துவமனை அருகே குடிநீர் நீரேற்று நிலையம் அருகே கருப்பு தொப்பி அணிந்து நின்று கொண்டு இருந்த நபரை தனிப்படை போலீசார் பிடிக்கும் போது ஆட்டோவில் தப்பி ஒட்டம் பிடித்துள்ளார்.

இச்சம்பவம் குறித்து போலீசார் அப்பகுதியில் உள்ள ஆட்டோ ஒட்டுனரிடம் விசாரணை செய்த போது எண்ணூர் அவதிப்பட்டு பகுதியைச் சேர்ந்த சூரியா (எ) மிட்டாய் சூரியா என தெரியவந்துள்ளது.

இதனையடுத்து வண்ணாரப்பேட்டை பகுதியில் பார்த்தசாரதி தெருவில் சூரியா வந்து இருப்பதாக தனிப்படை போலீசார்க்கு ரகசிய தகவல் கிடைத்ததை அடுத்து அங்கு சென்று தனிப்படை போலீசார் சூரியாவை மடக்கி பிடித்து காவல் நிலையத்தில் வைத்து பறித்து சென்ற தங்க செயினை கேட்ட போது தான் எடுக்க வில்லை என்று கூறியுள்ளார்.

போலீசாரின் கடும் விசாரணையில் தனது நண்பன் மோகனிடம் கொடுத்து வைத்து இருப்பதாக தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து மோகனிடம் இருந்து செயினை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.

இதனை தொடர்ந்து மிட்டாய் சூரியா மீது புதுவண்ணாரப்பேட்டை போலீசார் வழக்கு பதிவுசெய்து நீதி மன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

MUST READ