Homeசெய்திகள்க்ரைம்போதைப்பொருள் விவகாரம் நடிகர் மன்சூர் அலிகான் மகன் கைது – போலீசார் தொடா் விசாரணை

போதைப்பொருள் விவகாரம் நடிகர் மன்சூர் அலிகான் மகன் கைது – போலீசார் தொடா் விசாரணை

-

- Advertisement -

கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா சப்ளை செய்த விவகாரத்தில், செல்போனில் பதிவான எண்ணைக்கொண்டு நடிகர் மன்சூர் அலிகானின் மகனிடம் போலீசார்  விசாரணை நடத்துகின்றனர்.போதைப்பொருள் விவகாரம் நடிகர் மன்சூர் அலிகான் மகன் கைது – போலீசார்  தொடா் விசாரணை

சென்னை முகப்பேர் பகுதியில் உள்ள தனியார் கல்லூரி மாணவர்களுக்கு கடந்த மாதம் 4ம் தேதி ரெடிட் என்ற செல்போன் செயலி மூலம் போதை பொருட்கள் விற்பனை செய்த வழக்கு சம்பந்தமாக கல்லூரி மாணவர்கள் 5 பேரை கைது செய்தனர். இவர்கள் தகவல்படி, மண்ணடியை சேர்ந்த முகமது(41), இவரது தம்பி ஜெய்முஜின்(35) ஆகியோரை கைது செய்தனர்.

இவர்கள் ஆந்திராவில் இருந்து கஞ்சாவை வாங்கிவந்து வீட்டில் வைத்து காட்டாங்கொளத்தூர் பகுதியில் உள்ள தனியார் கல்லூரி மாணவர்களுக்கு விற்பனை செய்தது தெரிந்தது. இதனால் இருவரையும் சிறையில் அடைத்தனர்.இந்த வழக்கு தொடர்பாக ஏற்கனவே 7 பேரை கைது செய்தனர்.கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட செல்போன்களில் பதிவான நம்பர்களை வைத்து யார்?யாரை? தொடர்புகொண்டு கஞ்சா  சப்ளை செய்தார்கள் என தனிப்படை போலீசார் விசாரணை செய்தனர்.

.அதன்படி காட்டாங்கொளத்தூர் பகுதியில் தங்கியுள்ள கல்லூரி மாணவர்களிடம் கஞ்சா ஆயில் டப்பாக்கள் இருப்பதாக ரகசிய தகவல் வந்தது.அதன்படி, கடந்த மாதம் 30ம் தேதி தனிப்படை போலீசார், காட்டாங்கொளத்தூர் பகுதிக்கு சென்று அங்கு அறையில் பதுங்கியிருந்த கல்லூரி மாணவர்கள் 2 பேரை கைது செய்து விசாரித்தனர்.இதில், கேரளாவை சேர்ந்த ஆசிப்(21), முகமது(21) என்றும் காட்டாங்கொளத்தூர் பகுதியில் வாடகை வீட்டில் வசித்துள்ளனர் என்றும் தெரிந்தது. அவர்களது அறையில் சோதனை செய்து கஞ்சா ஆயில், சிறிய டப்பாக்கள் 15 பறிமுதல் செய்தனர்.  சிறிய டப்பாவில்75 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள  3 கிராம் கஞ்சா ஆயில் இருப்பதும் தெரியவந்தது.

கஞ்சா ஆயில் டப்பாவை 3 ஆயிரம் ரூபாயில் இருந்து 5ஆயிரம் ரூபாய் வரை விற்பனை செய்துள்ளனர். இதையடுத்து கல்லூரி மாணவர்கள் 2 பேரையும் அம்பத்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர். இவர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட செல்போனில் யார், யாரிடம் தொடர்புகொண்டு பேசியுள்ளனர் என்றும் கஞ்சா ஆயில் சப்ளை சென்னைக்கு மட்டுமா? வெளி மாநிலங்கள் மாவட்டங்களுக்கு சப்ளை செய்துள்ளார்களா? என்பது குறித்தும் செல்போன்களில் பதிவான எண்களை வைத்து தனிப்படை போலீசார் விசாரணை நடத்தினர்.

இதிர் பிரபல நடிகர் மன்சூர் அலிகானின் மகனின் செல்போன் நம்பர் பதிவாகியுள்ளது தெரியவந்தது. இதையடுத்து இன்று காலை தனிப்படை போலீசார், மன்சூர்அலிகானின் மகன் அலிகான் துக்ளக் உட்பட 4 பேரை ஜெ.ஜெ.நகர் காவல்நிலையம் அழைத்துவந்தனர். 12 மணி நேரத்துக்கும் மேலாக விசாரணை நடைபெறுகிறது.மன்சூர் அலி கானின் மகன் அலிகான் துக்ளக்  பிஎஸ் சி விசில் கம்யூனிகேஷன் படித்துவிட்டு, சினிமா துறையில் பணியாற்றி வருகிறார். மன்சூர் அலிகான் தயாரித்த ஒரு படத்தில் நடித்துள்ளார் எனவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

ஆந்திராவில் இருந்து கடத்தப்பட்ட 1.18 டன் குட்கா பறிமுதல் – சென்னை வாலிபர் கைது

 

 

MUST READ