Homeசெய்திகள்க்ரைம்நடிகை ரேகா நாயரின் கார் மோதியதில் ஒருவர் பலி!

நடிகை ரேகா நாயரின் கார் மோதியதில் ஒருவர் பலி!

-

- Advertisement -

நடிகை ரேகா நாயரின் கார் மோதியதில் ஒருவர் பலி!
சீரியல் நடிகை ரேகா நாயர் கார் மோதி பரிதாபமாக உயிரிழந்த நபர்.

நடிகை ரேகா நாயர் வம்சம், ஆண்டாள் அழகர், பகல் நிலவு, பால கணபதி, நாம் இருவர் நமக்கு இருவர் போன்ற தொலைக்காட்சித் தொடர்களில் நடித்துள்ளார்.
இரவின் நிழல், விளம்பரம் போன்ற பல்வேறு திரைப்படங்களிலும் நடித்து பிரபலமானவர். இரவின் நிழல் படத்தில் மேலாடை இல்லாமல் கவர்ச்சியாக நடித்து பரபரப்பை ஏற்படுத்தியிருந்தார்.

சமீபத்தில் எம்எல்ஏ ஒருவரை ரகசியமாக திருமணம் செய்துள்ளார் என்பது குறிப்பி்டத்தக்கது.

அருணாச்சலில் ராணுவ வாகனம் பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்து… 3 ராணுவ வீரர் மரணம்

இந்த நிலையில் நடிகை ரேகா நாயரின் கார் மோதிய விபத்தில் மஞ்சன் (55) என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

சிசிடிவி மூலம் விபத்தை ஏற்படுத்திய காரை போலீசார் கண்டறிந்தனர். மேலும் பாண்டி என்ற ஓட்டுநரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விசாரனையில் அந்த கார் நடிகை ரேகா நாயருக்கு சொந்தமானது என தெரியவந்துள்ளது.

நடிகை ரேகா நாயருக்கு சொந்தமான வாகனத்தை பறிமுதல் செய்து கிண்டி போக்குவரத்து புலனாய்வு பிரிவு காவல் நிலையத்தில் வைக்கப்பட்டுள்ளது.

MUST READ