Homeசெய்திகள்க்ரைம்அம்பத்தூர் : 250 கிலோ குட்கா பறிமுதல்

அம்பத்தூர் : 250 கிலோ குட்கா பறிமுதல்

-

- Advertisement -

பெங்களூரிலிருந்து தமிழ்நாட்டிற்கு வேனில் கடத்தி வந்த 250 கிலோ குட்கா அம்பத்தூர் வாகன சோதனையில் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. சம்மந்தபட்ட ஒருவர் கைது செய்யப்பட்டார்.

 அம்பத்தூர் :  250 கிலோ குட்கா பறிமுதல்

ஆவடி காவல் ஆணையரக எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் சட்டவிரோத கஞ்சா மற்றும் போதை பொருள் நடமாட்டத்தை கண்காணிக்க ஆணையர் கி.சங்கர் அவர்களின் உத்தரவின் பேரில், அம்பத்தூர் சரக உதவி ஆணையர் கிரி மேற்பார்வையில்,அம்பத்தூர் சட்டம், ஒழுங்கு காவல் ஆய்வாளர் டில்லிபாபு தலைமையிலான தனிப்படை  போலீசார் போதைப்பொருள் விற்பனையை தடுக்கும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

அந்த விதத்தில் கிடைத்த ரகசிய தகவலடிப்படையில் வாகன சோதனையில் ஈடுபட்ட பொழுது. வேனில் குட்கா ஏற்றி வந்த  ஜோசப் என்பவரை கள்ளிகுப்பம் சோதனை சாவடி அருகே குட்காவுடன் கைது செய்த அம்பத்தூர் போலீசார் திருவள்ளூர் மாவட்ட உணவு பாதுகாப்பு துறை அதிகாரி டாக்டர்.போஸ் உள்ளிட்டோர் நேரில் ஆய்வு செய்தனர்.

 அம்பத்தூர் :  250 கிலோ குட்கா பறிமுதல்

கடத்தி வரப்பட்ட 250 கிலோ குட்கா மற்றும் வேன்  பறிமுதல் செய்யப்பட்டது. அத்துடன் வேனை ஓட்டி வந்த ஜோசப் (43) கைது செய்யப்பட்டுள்ளார். அம்பத்தூர் காவல் நிலையத்தில் நடைபெற்றது.  விசாரணையில் இவர்  தூத்துக்குடி மாவட்டம் போளையார்புரத்தை சேர்ந்தவர் என்பதும், இவரின் மீது புழல், கொடுங்கையூர் உள்ளிட்ட பல்வேறு காவல் நிலையத்தில் குட்கா வழக்கு ஏற்கனவே உள்ளது என்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

மேலும் தொடர்ந்து கர்நாடக மாநிலம் பெங்களூரில் இருந்து வானில் கடத்தி வந்து கொடுங்கையூர் மற்றும் வடசென்னை பகுதியில் வைத்து வினியோகம் செய்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

பறிமுதல் செய்யப்பட்ட குட்கா பொருட்களை திருவள்ளூர் மாவட்ட உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் முன்னிலையில் பிடிபட்ட அனைத்து குட்கா பொருட்களையும் மருத்துவ ஆய்வுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

1.கூல்லிப் 100 கிலோ, 2.ஆர். எம். டி 6.5 கிலோ, 3. ஹான்ஸ் 41.3 கிலோ , 4. எம் டி எம் 27.750 கிலோ கிராம் , 5.ரெமோ.34.500 கிலோ கிராம், 6. ஸ்வாகத் 13.500 கிலோ கிராம், 7. விமல் 6. 800 கீலோ கிராம், 8. வி. ஐ.1.5கிலோ  என மொத்தம்  230 கிலோ குட்காவாகும்.

கைது செய்யப்பட்ட ஜோசப்பிடம் சென்னையில் எங்கெல்லாம் விநியோகம் செய்து வருகிறார் என்பது குறித்தும் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. விசாரணைக்கு பிறகு நீதிமன்ற நடைமுறைகளின் படி அம்பத்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி. புழல் சிறையில் அடைக்க தற்போது ஆவணங்கள் தயார் செய்யப்பட்டு வருகின்றன.

MUST READ