இரண்டு மகள்களை தவறான பாதைக்கு அழைத்துச் சென்ற தாய் கணவன் கொடுத்த புகாரில் மனைவி கைது. 15 வயது 12 வயது சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த இரு வாலிபர்கள் கைது.
சென்னை, திருவொற்றியூர் தாங்கல் பீர்பயில்வான் தர்கா ரோட்டை சேர்ந்த சுல்தான் ஹசீனா இவர்களுக்கு 15 வயதில் ஒரு மகளும் 12 வயதில் ஒரு மகளும் இருக்கின்றனர். சுல்தான் பிரிஞ்சி கடையில் வேலை செய்து வருகிறார்.
15 வயது மகள் தனியார் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து பாதியிலே நிறுத்தி விட்டதாகவும், 12 வயது மகள் ஏழாம் வகுப்பு படித்துவிட்டு பாதியிலே நிறுத்தி விட்டு அம்மாவுடன் வீட்டை கவனித்ததாக தெரிகிறது.
இந்நிலையில் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு பஞ்சா ஊர்வலத்தின் போது வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த ஆட்டோ டிரைவர் முகமது ரபிக் (வயது 23). தனியார் வங்கி ஊழியர் அப்துல் கலாம் (வயது 23) ஆகியோர் மகள்களை காதலிப்பதாக கூறி பழக்கமாகியுள்ளனர்.
இதற்கு உடந்தையாக தாய் அசினா பணம் பெற்று கொண்டு கணவருக்கு பாலில் மயக்க மருந்து கொடுத்து தூங்க வைத்து விட்டு வாலிபர்களை இரவு நேரங்களில் வீட்டிற்கு வரவழைத்து மகள்களுடன் பழக செய்துள்ளார்.
இதனை அறிந்த சுல்தான் திருவொற்றியூர் மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். 15வயது மூத்த மகள் அப்துல் கலாம் என்பவர் தவறான உறவு வைத்துக் கொண்டதாகவும், 12 வயது இரண்டாவது மகள் முகமது ரௌபிக் என்பவர் தவறான உறவு வைத்துக் கொண்டதாக காவல் நிலையத்தில் தந்தை சுல்தான் புகார் அளித்துள்ளார்.
அதன் அடிப்படையில், போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்த போலீசார். சிறுமிகளின் தாய் மற்றும் முகமது ரபிக், அப்துல் கலாம் ஆகிய மூவரையும் நேற்று கைது செய்தனர். விசாரணைக்கு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.