ஆம்ஸ்ட்ராங் கொலை குற்றவாளிகளுக்கு பாஜக முன்னாள் நிர்வாகி புளியந்தோப்பை சேர்ந்த அஞ்சலை அடைக்கலம் கொடுத்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.
பகுஜான் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தலைமறைவாக இருந்து வந்த அஞ்சலையை காவல்துறையினர் நள்ளிரவு கைது செய்தனர். பாஜக வில் மகளிர் பிரிவில் நிர்வாகியாக இருந்த அஞ்சலையிடம் போலீசார் துருவி துருவி விசாரணை நடத்தி வருகின்றனர்.
கொலையாளிகளுக்கு பண பரிமாற்றம், தங்கும் வசதி ஆகியவற்றை செய்து கொடுத்துவிட்டு முன்கூட்டியே எஸ்கேப் ஆகியுள்ளார் அஞ்சலை. பண பரிவர்த்தனை தொடர்பான விவரங்களை அவர் கணக்கு வைத்துள்ள 2 வங்கிகளில் போலீசார் கேட்டுள்ளனர்.
அஞ்சலையிடம் கொண்டித்தோப்பு காவலர் குடியிருப்பு வளாகத்தில் வைத்து விசாரணை நடத்திய போலீசார் வழக்கு தொடர்பான துப்பு துலக்க வேறொரு இடத்துக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.
கொலை திட்டத்தை வெற்றிகரமாக முடிக்க புழல், சித்தூர், அரக்கோணம், திருநின்றவூர் ஆகிய இடங்களில் பலமுறை நடந்த சதி ஆலோசனை கூட்டங்களில் அஞ்சலை பங்கேற்றதாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும் கொலையாளிகளின் கைச்செலவுக்கு தனது ஆட்களை அனுப்பி நேரடியாகவே கையிலிருந்த பணத்தை கொடுத்துள்ளார்.
ஆற்காடு சுரேஷ் சாகும் வரை பவர்ஃபுல் ரவுடியாக வந்ததாக புகழ்ந்து பேசி, ஆம்ஸ்ட்ராங் கொலையாளிகளை உற்சாகப்படுத்தியுள்ளார்.
ஆம்ஸ்ட்ராங்கின் கதையை வெற்றிகரமாக முடித்தால் சென்னையில் நம்பர் ஒன் கேங்க் நாம்தான் என பொன்னை பாலு தலைமையிலான கும்பலை உசுப்பேற்றி பேசி உள்ளார். இந்த கொலையை அரங்கேற்ற நமக்கு நேரடியாகவும் மறைமுகமாகவும் உதவி செய்ய அரசியல் பெரும்புள்ளிகள், தொழிலதிபர்கள், காத்திருப்பதாக கூறியுள்ளார்.
வடசென்னை பகுதியில் நடக்கும் அரசு ஒப்பந்த பணிகளை மேற்கொள்பவர்களிடம் இருந்து வரும் மாமூல், தனியார் கட்டுமான தொழிலதிபர்களிடமிருந்து மாமூல், கஞ்சா விற்பனை, கந்துவட்டி, கட்டப்பஞ்சாயத்து ஆகியவற்றில் கொடி கட்டி பறக்கலாம் என்று நம்பிக்கையூட்டியுள்ளார்.
வங்கதேசத்தில் உள்ள தமிழர்களின் குடும்பத்திற்கு உதவி செய்ய இந்திய தூதரகத்திற்கு முதலமைச்சர் உத்தரவு
மேலும் அரசு அதிகாரிகள் காவல்துறையினரையும் சரிகட்டி விடலாம் என்றும் அதன்பின்னர் நம்மை கண்ட்ரோல் பண்ணுவதற்கு சென்னையில் ஆளே கிடையாது என உரத்த குரலில் பேசி பொன்னை பாலு தலைமையிலான கும்பலுக்கு வெறி யேற்றியுள்ளார்.
நீங்கள் சிறை சென்றாலும் உங்கள் குடும்பத்திற்கு தேவையான நிதி உதவி, பாதுகாப்பு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் பேசி கொலையாளிகளுக்கு மன தைரியத்தை ஊட்டியுள்ளார்.