Homeசெய்திகள்க்ரைம்அண்ணாமலைப் பல்கலைக்கழக போலிச் சான்றிதழ் - தீட்சிதருக்கு தொடர்பு

அண்ணாமலைப் பல்கலைக்கழக போலிச் சான்றிதழ் – தீட்சிதருக்கு தொடர்பு

-

- Advertisement -

அண்ணாமலை பல்கலைக்கழக

சிதம்பரத்தில் போலிச் சான்றிதழ் தயாரித்ததாக அண்ணாமலை பல்கலைக்கழக நிர்வாகம் புகார் அளித்துள்ளது . தீட்சிதர் உள்ளிட்ட இருவரிடம் தனிப்படை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

விசாரணையானது கிள்ளை காவல் நிலையத்தில்  நடந்து வரும் நிலையில் இதில் மேலும் பலருக்கு தொடர்பு உள்ளதா என தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தேர்தல் ஆணையம் சந்தேகத்திற்கு அப்பாற்பட்டதாக இருக்க வேண்டும் – என்.கே.மூர்த்தி

உலகப் புகழ் பெற்ற சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் மருத்துவம் முதல் கலை , அறிவியல் வரை பல்வேறு பாடப் பிரிவுகள் உள்ளன. இந்நிலையில் அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் பெயரில் சில சான்றிதழ்கள் கண்டெடுக்கப்பட்டதாகவும், அதுகுறித்து ஆய்வு செய்தபோது ஆய்வில் அவை போலிச் சான்றிதழ் எனவும் அண்ணாமலை பல்கலைக்கழக நிர்வாகத்திற்கு தெரிய வந்துள்ளது.

இதையடுத்து இந்த சம்பவம் குறித்து சிதம்பரம் ஏ.எஸ்.பி-யிடம் பல்கலைக்கழக நிர்வாகத்தின் சார்பில் புகார் மனு ஒன்று அளிக்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் ஏ.எஸ்.பி உத்தரவின் பேரில் தனிப்படை போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

அண்ணாமலைப் பல்கலைக்கழக போலிச் சான்றிதழ் - தீட்சிதருக்கு தொடர்பு

விசாரணையில் இருவர் மீது சந்தேகம் எழுந்துள்ளதை அடுத்து , போலியான கல்விச் சான்றிதழ்கள் தயாரித்ததாக சிதம்பரம் மன்மதசாமி நகரை சேர்ந்த சங்கர் தீட்சிதர் (39) மற்றும் மீதிகுடி மெயின்ரோடு பகுதியைச் சேர்ந்த நாகப்பன் (50) ஆகிய இருவரையும் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரித்துள்ளனர்.

இதையடுத்து மேல் விசாரணைக்காக அவர்கள் இருவரையும் கிள்ளை காவல் நிலையத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். சான்றிதழ்களை அவர்கள் எப்படி தயாரித்துள்ளார்கள்? யார் யாருக்கு அந்த சான்றிதழ்கள் வழங்கப்பட்டுள்ளது? இந்த போலி கல்வி சான்றிதழ் தயாரிப்பில் யார் யாருக்கு தொடர்பு உள்ளது என்பது போன்ற விவரங்கள் விசாரணையின் முடிவில் தான் தெரியவரும் என கூறப்படுகிறது.

இரண்டு கணினிகள், ஒரு லேப்டாப், ஒரு பிரிண்டர், ஒரு செல்போன் ஆகியவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழகத்தில் பிரபல பல்கலைக்கழகமான அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் பெயரில் போலி சான்றிதழ்கள் கிடைத்த  சம்பவம் சிதம்பரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அண்ணாமலைப் பல்கலைக்கழக போலிச் சான்றிதழ் – தீட்சிதருக்கு தொடர்பு

MUST READ