Homeசெய்திகள்க்ரைம்சென்னையில் ஆயுதங்களுடன் ஏ-பிளஸ் கேட்டகிரி ரவுடி கூட்டாளியுடன் கைது!

சென்னையில் ஆயுதங்களுடன் ஏ-பிளஸ் கேட்டகிரி ரவுடி கூட்டாளியுடன் கைது!

-

சென்னை விருகம்பாக்கத்தைச் சேர்ந்த ஏபிளஸ் கேட்டகிரி ரவுடி கார்த்திகேயன் என்ற துப்பாக்கி கார்த்தி. இவர் மீது 4 கொலை வழக்குகள் 5 கொலை முயற்சி வழக்குகள் பிற வழக்குகள் என மொத்தம் 29 வழக்குகள் இருக்கிறது.

சென்னையில் ஆயுதங்களுடன் ஏ-பிளஸ் கேட்டகிரி ரவுடி கூட்டாளியுடன் கைது

கோயம்பேடு மார்க்கெட் பகுதிகளில் வியாபாரிகள், பொதுமக்களை மிரட்டி மாமூல் வசூல் செய்தும் வந்ததாக கூறப்படுகிறது. மேலும் சென்னை புறநகர் மற்றும் திருவள்ளூர் மாவட்டத்தில் ரியல் எஸ்டேட் அதிபர்களை மிரட்டியும் கட்டப் பஞ்சாயத்திலும் ஈடுபட்டு சம்பாதித்து வந்ததுள்ளார் துப்பாக்கி கார்த்தி.

சென்னையில் ஆயுதங்களுடன் ஏ-பிளஸ் கேட்டகிரி ரவுடி கூட்டாளியுடன் கைது

இவர் மீது நீதிமன்ற வாரண்டு இருப்பதால்  தீவிர குற்றவாளிகள் தடுப்பு பிரிவு போலீசார் தேடி வந்தனர். இந்த நிலையில் போரூர் அடுத்த மவுலிவாக்கம் பகுதியில் பதுங்கி இருந்த துப்பாக்கி கார்த்தியை போலீசார் நேற்று கைது செய்தனர். அவருடன் கூட்டாளி மணிவர்மா என்பவரையும் போலீசார் கைது செய்துள்ளனர். இதையடுத்து 2 பேரையும் விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டனர்.

சென்னையில் ஆயுதங்களுடன் ஏ-பிளஸ் கேட்டகிரி ரவுடி கூட்டாளியுடன் கைது

கைதான 2 பேரிடமிருந்து 9 பட்டா கத்திகளை போலீசார் பறிமுதல் செய்தனர். யாரை கொலை செய்ய ஆயுதங்களோடு பதுங்கி இருந்தனர்? என்பது குறித்து விருகம்பாக்கம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

MUST READ